உடல் எடையை குறைக்க எடுக்கப்படும் முயற்சி என்பது வயது ஏற ஏற குறைவான பலன்களையே கொடுக்கிறது. அதிலும் வயது ஏற ஏற பெண்களுக்கு எடை இழப்பு என்பது சவாலானதாகவே இருக்கிறது.
வயதாகும்போது, பொதுவாக உடலின் செயல்திறன், உணவுமுறை, பழக்கவழக்கங்கள் மற்றும் தூக்க முறை எல்லாமே மாறும் நிலையில் அவை உங்கள் எடையைக் குறைக்கும் திறனையும் பாதிக்கின்றன.
இன்றைய கால கட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. உடல் பருமனை குறைக்க பலர், தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒரு முறையை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், வயது ஏற ஏற பெண்களுக்கு எடை இழப்பு என்பது சவாலானதாகவே இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை விரிவகா பார்க்கலாம்.
ஒரு பெண் 40 மற்றும் 50 வயதை எட்டும் போது ஒரு முக்கிய கட்டத்தை கடந்து செல்கிறாள். மாதவிடாய் நிற்பது என்பது ஒரு இயல்பான உயிரியல் கட்டமாகும். இது ஒரு பெண்ணின் உடல், பசியின்மை மற்றும் ஹார்மோன்களில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில், உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. இது கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.
நீங்கள் வயதாகும்போது உங்கள் வளர்சிதை மாற்றம் குறைவது இயல்பு, நீங்கள் 30 ஐத் தொட்ட பிறகு, அது தனது வேகத்தைக் குறைக்கிறது. நீங்கள் சரியான உணவை சாப்பிடாமல், அடிக்கடி உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், அது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் இந்த எடையை குறைக்க கடினமாக இருக்கலாம்.
உங்களுக்கு வயதாகும்போது, இரவில் தூங்குவது கடினமாகிறது. இது ஒரு வயது சார்ந்த விஷயம். 5 அல்லது 6 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவதற்கு நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மோசமான தூக்கமும் எடை கூடுவதற்கு வழிவகுக்கும்.
நீங்கள் வயதாகும்போது, உங்கள் வாழ்க்கை முறை சுறுசுறுப்பாக இருக்காது. வயதின் காரணமாக, உங்கள் ஆற்றல் மட்டம் குறைவாக இருக்கலாம், நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், உடல் பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் சுசுறுப்பாக இருக்கலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்த வேண்டும்.அதாவது வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது உடல் பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
வயது ஏற ஏற தசை இழப்புக்கு வழிவகுக்கிறது. இது கொழுப்பு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். எனெனில் தசைகள் கலோரிகளை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இதைத் தவிர்க்க, உடல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.