Exercises to sharpen Eyesight: கண்கள் கடவுள் நமக்கு அளித்த ஒரு விலைமதிப்பற்ற பரிசு. இதன் மூலம் உலகின் அழகை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இன்றைய அவசர ஓட்டத்தில், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் கண்களையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் தொடர்ந்து கம்யூட்டரில் வேலை பார்ப்பதால், எரிச்சல், வறட்சி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு ஆன் லைன் வகுப்புகள் காரணமாக அதிக நேரம் கணிணியில் நேரத்தை செலவிடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்பு வயதானவர்களுக்கு கண்பார்வை குறைந்து வந்த நிலையில், இன்று  இளம் வயதிலிருந்தே கண்பார்வை குறைகிறது. ஆனால், கவலை வேண்டாம் சில யோகாசனங்கள் மூலம் கண்பார்வையை கூர்மைக்கலாம்.


1. முன்னோக்கி பார்த்தல்


முதலில், உங்கள் கால் மீது நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள்.


இடது கையை இடது முழங்காலில் வைக்கவும்.


இப்போது உங்கள் கண்களால் இடது கட்டை விரலில் கவனம் செலுத்தி கூர்ந்து பார்க்கவும்.


பின்னர் உங்கள் கண்கள் உயரத்தில் உள்ள ஒரு  புள்ளியில் கவனம் செலுத்துங்கள்.


இதற்குப் பிறகு, உங்கள் வலது கையின் கட்டைவிரலை கூர்ந்து நோக்கவும்.  மீண்டும் கண் பார்வையை நேராக செலுத்தவும். இடது மற்றூம் வலது புறம் 5-5 முறை பயிற்சி செய்யவும்.


ALSO READ | Protein deficiency: உடலில் புரத சத்து குறைபாட்டின் ஆபத்தான அறிகுறிகள்


2. இமை


இந்த ஆசனத்தைச் செய்ய, முதலில் உட்கார்ந்து கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்


இப்போது குறைந்தது பத்து முறையாவது உங்கள் கண்களை வேகமாக சிமிட்டுங்கள்.


பிறகு, உங்கள் கண்களை 20 விநாடிகள் மூடி கொண்டு, அவற்றுக்கு ஓய்வு கொடுங்கள்.


இந்த செயல்முறையை ஐந்து முறை செய்யவும்.


ALSO READ | Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!!


3.  உள்ளங்கை


இந்த யோகாசனமானது கண்களை ஆரோக்கியமாக வைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதைச் செய்ய, முதலில் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த மூச்சு விடுங்கள்.


இப்போது உங்கள் உள்ளங்கைகளை மிக விரைவாக தேய்க்கவும், அவை கதகதப்பாக மாறும்.


பின்னர் அவற்றை உங்கள் இமைகளில் மீது  வைக்கவும்.


இப்போது உள்ளங்கைகளின் கதகதப்பை கண்களில் மற்றும் கண்களின் தசைகளில் உணரலாம்.


கைகளின் வெப்பம் கண்களால் முழுமையாக பரவும் வரை இந்த நிலையில் இருங்கள்.


பிறகு, உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் கைகளை கீழே இறக்கவும்.


இந்த செயல்முறையை மூன்று முறை செய்யவும்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


4. பக்க வாட்டில் பார்ப்பது


முதலில், உங்கள் கால்களை மடக்கி நேரான நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.


இப்போது உங்கள் கைகளின் முட்டிகளை மூடி, கட்டைவிரலை நீட்டி உங்கள் கைகளை உயர்த்தவும்.


இப்போது உங்கள் கண்களை கட்டை விரலை கூர்ந்து நோக்குதல், பின் நேராக பார்த்தல் என மாறி மாறி பார்க்கவும்


இந்த பயிற்சியை 20 முறை செய்யவும். அதன் பிறகு கண்களை மூடிக்கொண்டு அவற்றுக்கு ஓய்வு கொடுங்கள்.



பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR