ஆரோக்கியத்துக்கு முதன்மையானது நடைபயிற்சி மட்டும் தான் என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தால், அதனை ஒரு பயிற்சியாக அல்லாமல் அன்றாடம் செய்யும் வேலையை போல் கடைபிடித்தார்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நடந்து செல்வது, கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவதோடு, பிரகாரத்தை சுற்றி வருவது என அதனை அன்றாட பணியாக நடை பயிற்சியை கடை பிடித்தார்கள். நாம் ஆனால், நடக்கும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு கூட வாகனங்களில் செல்லும் அளவிற்கு சோம்பேறியாகிவிட்டோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவதுடன் கூடவே, சரியான அளவான உடலுழைப்பு, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதில், பயிற்சியை பொறுத்தவரை, நடை பயிற்சி என்பது அனைவரும் பின்பற்றக் கூடிய வகையிலான மிக சிறந்த பயிற்சி என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது.


எட்டு வடிவ நடைபாதையின் அடிப்படை ‘வர்ம மருத்துவம்’ என்னும் சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். சித்த மருத்துவ கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில் இந்த வர்ம நடைபாதை செயல்படுகிறது. நமது நாட்டின் சித்தர்கள் கண்டுபிடித்த இந்த 8 வடிவ பயிற்சி முறையை மேலை நாட்டவர் ‘இன்பினிட்டி வாக்கிங்’ என்ற பெயரில் கடைபிடிக்கின்றனர்.


வர்மப் புள்ளிகளை மருத்துவ முறைப்படி தூண்டுவதன் மூலம், பல்வேறு நோய்களைக் கட்டுக்குள் வைக்கலாம். பழங்காலத்தில் போர் காலத்தில், அடிபட்ட வீரர்களுக்கு முதலுதவி மருத்துவமாக வர்மம் இருந்தது குறிப்பிடத்தக்கது. நமது உடலின் பல்வேறு பகுதிகளில் `வர்மம்’ எனப்படும் ஆற்றல் புள்ளிகள் குவிந்துகிடக்கின்றன. அந்த வகையில், நமது உள்ளங்காலில் எண்ணற்ற வர்மப் புள்ளிகள் இருக்கின்றன. கூழாங்கற்களால் அமைக்கப்பட்ட எட்டு வடிவ நடைபாதையில் வெறும் காலில் நடப்பதன் மூலம், உள்ளங்காலில் உள்ள வர்ம ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படும். இதனால், எண்ணிலடங்கா நோய்களை குணப்படுத்தலாம். 


ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 8 வடிவ நடைபயிற்சி


எட்டு வடிவ நடைபயிற்சியை காலை 5 முதல் 6 மணி அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை மேற்கொள்வது சிறந்தது. 8 வடிவ நடை பயிற்சியின் போதே வயிறு காலியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். 8 வடிவ பயிற்சியை முறையாக செய்தால், அதன பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.


கால் – கை வலிப்பு, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா, சைனஸ், மூல நோய்கள், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நல குறைபாடுகளை 8 வடிவ நடைப்பயிற்சி குணமாக்கும். தலைவலி, உடல் வலி, செரிமான பிரச்சனைகள், உடல் பருமன், மலச்சிக்கல், தைராய்டு, முழங்கால் வலி, போன்ற பல நோய்களால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில நாட்களிலேயே நிவாரணத்தை பெறுவதாக கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் போதுமானதாகும்.


எனினும், இந்த பயிற்சியை செய்யும் முன் நோயாளிகள், குறிப்பாக இதய நோய், பக்க வாதம், சிறுநீரக பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது தான் என்றாலும் கர்ப்ப காலத்தில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள கூடாதுஎன்கிண்றனர் வல்லுநர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ