கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பற்றிய அச்சமா? இந்த 5 உணவுகள் உங்களை காக்கும்

Diabetes in Pregnancy: நீரிழிவு நோயால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் குறைமாத குழந்தை பிறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயை தவிர்க்கும் வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 06:49 PM IST
  • கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சாலட் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுங்கள்.
  • தயிரில் புரோ-பயாடிக்குகள் உள்ளன.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பற்றிய அச்சமா? இந்த 5 உணவுகள் உங்களை காக்கும் title=

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமாக பசி எடுப்பதுண்டு. அவர்களால் பசியை கட்டுப்படுத்த முடிவதில்லை. சாப்பிட வேண்டும் என தோன்றும் பொருட்களை உடனே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு அந்த காலத்தில் இருக்கும். பல நேரங்களில் இது பெண்களுக்கு நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் கர்ப்பகால நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. 

இதில், கர்ப்பிணிப் பெண்ணின் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு நீரிழிவு பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், கர்ப்ப காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். நீரிழிவு நோயால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் குறைமாத குழந்தை பிறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயை தவிர்க்கும் வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

அதிக சாலட் சாப்பிடுங்கள்:

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சாலட் அதிகம் உட்கொள்ள வேண்டும். சாலட் சாப்பிடுவதால் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். சாலட் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சாலட் கிளைசெமிக் இண்டெக்ஸைக் குறைத்து சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கிறது.

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

முட்டை:

கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுங்கள். முட்டை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். புரதம், கால்சியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் காணப்படுகின்றன. இது பல நன்மைகளைத் தரும். சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும்.

பாதாம்:

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பாதாம் பருப்பைச் சாப்பிடலாம். ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிடுவது குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவுகிறது. சிற்றுண்டியின் போது பசி எடுத்தால் பாதாம் பருப்பை சாப்பிடலாம். இது வயிற்றை நிரப்பும், உங்களின் உணவுப் பசியும் தணியும்.

விதைகள்:

கர்ப்ப காலத்தில் விதைகளையும் உட்கொள்ள வேண்டும். விதைகளை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இது பசியைத் தணிக்கிறது மற்றும் உடலுக்கு கால்சியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் இதன் மூலம் கிடைக்கும்.

தயிர்:

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுங்கள். தயிரில் புரோ-பயாடிக்குகள் உள்ளன. இவை குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயை பெருமளவு கட்டுப்படுத்தலாம். தயிர் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Bad Cholesterol குறைக்க ஸ்பெஷல் எண்ணெய், ட்ரை பண்ணுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News