ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொருள் படும், An apple a day keeps the doctor away என்னும் ஆங்கில பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கக் கூடும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொருள் படும், An apple a day keeps the doctor away என்னும் ஆங்கில பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கக் கூடும். அப்படிப்பட்ட இந்த அற்புதமான பழத்தை சாப்பிடுவதற்கு முன், பலர் அதன் தோலை நீக்கிவிடுகிறார்கள். அதை செய்வதால், பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இழக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தோலுடன் ஆப்பிளை உண்பதால் வயிறு, கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயம் குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் தோலின் ஆரோக்கிய நன்மைகள்:
தொப்பையை கரைக்கும் உர்சோலிக் அமிலம்
எடையை குறைக்கும் உணவில் ஆப்பிளும் ஒன்று. அதன் தோலில் அதிக அளவு உர்சோலிக் அமிலம் உள்ளது. இது தொப்பையை கரைக்கவும், எடையை வேகமாக குறைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!
சுவாச பிரச்சனைகளை நீக்கும் க்வெர்செடின்
சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிளைத் தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும், ஏனெனில் இந்த தோல்களில் க்வெர்செடின் என்ற பொருள் உள்ளது, இது சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.
வைட்டமின் சி
முழு ஆப்பிளில் சுமார் 8.5 மில்லிகிராம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால், ஆப்பிளை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். தோலை அகற்றும்போது, இந்த சத்துக்கள் 6.5 மில்லிகிராம் மட்டுமே இருக்கும்.
நார்ச்சத்து
ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் சுமார் 4.5 கிராம் நார்ச்சத்து உள்ளது, ஆனால் இந்த ஆப்பிளின் தோலை அகற்றும் போது, இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்தின் அளவு சுமார் 2 கிராம் மட்டுமே இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ