சேப்பங்கிழங்கின் இந்த `7` அற்புத நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்..!!
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் (Folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.
புதுடெல்லி: பொதுவாக சேப்பங்கிழங்கு, கிழங்கு வகை என்பதால், பொதுவாக நாம் அதை உண்ணாமல் ஒதுக்கி விடுகிறோம். ஆனால், சேப்பங்கிழங்கு காய்கறி ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது. மக்னீசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளன அவை உங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
1. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயம் குறையும்
சேப்பங்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
2. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
சேப்பங்கிழங்கில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ள இந்த சேப்பங்கிழங்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சேப்பங்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் கார்போஹைட்ரேட்டுகள் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. அதனால் சாப்பிட்ட உடனேயே இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பைத் தடுக்கிறது.
ALSO READ | Health Alert! சமைத்த உருளைகிழங்கை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பெரும் ஆபத்து.!!
3. நோய் எதிர்ப்பு சக்தி
சத்துக்கள் நிறைந்த அரபியை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. எடை குறையும்
சேப்பங்கிழங்கு எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும் என்பதால், பசி எடுக்காமல் இருக்கும். இது உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. சேப்பங்கிழங்கில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
5. செரிமானம் தொடர்பான பிரச்சனை நீங்கும்
சேப்பங்கிழங்கில்ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சரியாக வைக்கிறது. இதனுடன் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவையும் நீங்கும்.
6. கண் ஆரோக்கியம்
சேப்பங்கிழங்கு கண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!
7. தசைகள் வலுவாகும்
சேப்பங்கிழங்கில் உள்ள மெக்னீசியம் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை பின்பற்றும் முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR