கடந்த சில ஆண்டுகளாக, சைவ உணவை நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைவ உணவின் முக்கியத்துவத்தை இந்தியா மட்டுமல்ல, பல வெளிநாடுகளும் அங்கீகரித்துள்ளது. உலகில் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் பால் வியாபாரம் இப்போது ரூ .1.48 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 2020 ஆம் ஆண்டில், அமெரிக்க பால் சந்தையில் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாலின் பங்கு 15%ஆகும். இது தவிர, இறைச்சிக்கு மாற்றாக,  சைவ இற்ச்சியை தயாரிக்கும் வணிகமும் வேகமாக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைவ இறைச்சி  என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு,  இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம்  சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


தாவர அடிப்படையிலான இறைச்சி, சோயா, உருளைக்கிழங்கு புரதம், பட்டாணி புரதம், வெண்டைக்காய் புரதம் மற்றும் அரிசி புரதம் போன்ற பல பொருட்களை கொண்டு சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மற்ற பொருட்களுடன் கலக்கப்பட்டு சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது


சாதாரண இறைச்சியை விட சைவ இறைச்சி மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது நிபுணர்களின் சிறப்பு மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்படுகிறது, இதன் காரணமாக சுகாதாரத்தில் சிறப்பு கவனம் எடுக்கப்படுகிறது.


இந்த தாவரங்களிலிருந்து கிடைக்கும் பாலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சோயா பால், அரிசி பால், தேங்காய் பால், பாதாம் பால், ஓட்ஸ் பால் போன்றவை இதில் அடங்கும்.


தாவர பால் நன்மைகள்


1. எளிதில் ஜீரணமாகும்


லாக்டோஸ், கொலஸ்ட்ரால், செயற்கை ஹார்மோன்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஜென்கள் இல்லாததாலும்,  எளிதில் ஜீரணிக்கப்படுவதால், பசுவின் பால், எருமை பாலை விட தாவரங்களிலிருந்து பெறப்படும் பால் சிறந்தது.


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


2. எடையைக் கட்டுக்குள் வைக்கும்


தாவரங்களில் இருந்து பெறப்படும் பாலில், பசு மற்றும் எருமை பாலில் உள்ளதை விட குறைவான கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்


3. இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்


தாவரப் பாலில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, எனவே பெரும்பாலான தாவரப் பால் இதய நோய் பாதிக்கப்பட்ட மக்களும் கூட தாராளமாக அருந்தலாம்.


தாவர பொருட்களிலிருந்து இறைச்சி மற்றும் பால் தயாரிப்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல. இது முக்கியமாக தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அடிப்படை கூறுகளான புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றை மீண்டும் இணைக்கும் செயல்முறையாகும். ஆசியாவில் உள்ள பௌத்தர்கள் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கூறுகளை கலப்பதன் மூலம் செயற்கை இறைச்சியை உருவாக்கி வருகின்றனர். சோயாபீன் பால் பல தசாப்தங்களாக சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR