முந்திரி மிகவும் சத்தானது, விலை அதிகமானது என்றாலும், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. உண்மையில் முந்திரி , ஒரு பழம். முந்திரி பழத்தில் இருந்துதான் அதன் கொட்டை எடுக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்திரியின் மரத்தில் அதன் பூவின் அடிப்பகுதியில் உருவாகும் பூக்காம்புப் பகுதியே பழம்போல காணப்படுகிறது. இது, முந்திரிப் பழம், போலிப் பழம், முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.


முந்திரிப் பழத்தை, ஒரு பழமாகவே உண்ணலாம். முந்திரி (Cashew Nut) அதிகம் விளையும் இடங்களில், முந்திரிப் பழத்தை சமைப்பார்கள். இதை, பலாப்பழத்தில் இருந்து உணவு வகைகள் தயாரிப்பதற்கு ஒப்பிடலாம்.


ALSO READ | "ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக Cancerஐ தடுக்கும் மாயம் என்ன?


முந்திரியின் பழத்தை வினிகருடன் சேர்த்து புளிக்க வைத்து மதுபானம் தயாரிக்கும் பழக்கம் பிரேசிலில் உண்டு. முந்திரிப் பழத்தில் இருந்து சட்னி மற்றும் ஜாம் தயாரிக்கப்படுகிறது.


ஆனால், எந்த வடிவிலும் முந்திரியை அதிகமாக சாப்பிட்டால் அது ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியின் பயன்பாடு, சிறுநீரகத்தில் பாதிப்புகளை (Kidney Health) ஏற்படுத்தும்.


முந்திரியில் அதிக அளவில் ஆக்சலேட்கள் இருப்பதால், நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே முந்திரியை அளவாகவே பயன்படுத்துங்கலாம். அதேப்போல் முந்திரிப் பழத்தையும் அதிகமாக சாப்பிட முடியாது. 



முந்திரிப்பழத்தை அப்படியே அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படலாம். 


முந்திரிக் கொட்டையுடன் ஒப்பிடும்போது, அதன் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகமாக உள்ளன.


முந்திரியை பழமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளுக்கும், கொட்டையாக சாப்பிடுவதற்கும் உள்ள ஊட்டச்சத்து விகிதங்களில் மாறுபாடுகள் அதிகமாக உள்ளது. 


ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR