வாட்டி வதைக்கும் வறட்டு இருமலை விரட்டும் ‘சில’ அற்புத மூலிகைகள்!
வறட்டு இருமல் நீண்ட நாள் நீடித்து, நமது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். வறட்டு இருமலை போக்க சில மூலிகை வைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியம் வியக்கத் தக்க பலன்களைக் கொடுக்கும்.
இருமலில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நுரையீரலில் சளி அதிகமாவதன் காரணமாக ஏற்படும் இருமல். மற்றொன்று ஒவ்வாமை காரணமாக ஏற்படும் வறட்டு இருமல். இதில் வறட்டு இருமல் நீண்ட நாள் நீடித்து, நமது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பல நேரங்களில் அவை பலனளிப்பதில்லை. அதோடு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது. வறட்டு இருமல் தொண்டையில் கடுமையான வலியையும் ஏற்படுத்துகிறது. வறட்டு இருமலை போக்க சில மூலிகை வைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியம் வியக்கத் தக்க பலன்களைக் கொடுக்கும்.
வறட்டு இருமலை போக்க வேண்டுமானால், வறட்டு இருமல் தொடங்கிய உடனேயே சரியான மருத்துக்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் கவனக்குறைவால் வறட்டு இருமல் மோசமானால், இந்த உடனடி தீர்வுகள் உங்களுக்கு கை கொடுக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வறட்டு இருமல் அடிக்கடி ஏற்பட்டால், நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் அதிமதுர வேரை வாங்கி சிறு துண்டு வாயில் போட்டு அதன் சாறை உமிழ்நீரோடு கலந்து விழுங்கினால் வறட்டு இருமல் கட்டுப்படும். அதிமதுர பொடியும் கடைகளில் கிடைக்கும். அரை டம்ளர் நீரில் கால் டீஸ்பூன் அளவு அதிமதுர பொடியை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இரவில் அரை டம்ளர் பாலில் இரண்டு சிட்டிகை அதிமதுர பொடியை கலந்து குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.
சீரகம்
சிலருக்கு உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு காரணமாக வறட்டு இருமல் இருக்கும். இவர்கள் அரை டம்ளர் நீரில் கால் டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் காரணமாக வரக்கூடிய இருமல் சரியாகும்.
மேலும் படிக்க | ’கோடை ஆப்பிள்’ நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
மஞ்சள் பால்
வறட்டு இருமல் நீங்க மஞ்சள் பலனளிக்கும். இதில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவுகிறது. வறட்டு இருமல் குணமாக மஞ்சள் பால் சிறந்த பலன் தரும். மேலும், மஞ்சளை சிறிது சூடாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஆவி பிடிப்பது
வறட்டு இருமல் வந்தால் நீங்கள் ஆவி பிடிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும். சிலருக்குவ்பேசும் போது படுக்கும் போது இருமல் அதிகம் இருக்கும். இந்நிலையில், வெற்று நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். அதில் மஞ்சள் சேர்த்து ஆவி பிடிப்பது இன்னும் சிறப்பு.
சித்தரத்தை
சித்தரத்தை ஆயுர்வேத இருமல் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இருமல், சளி, சளி போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. சித்தரத்தை கஷாயத்தைக் குடித்தவுடன் வறட்டு இருமல் குணமாகும்.
எலுமிச்சை - இஞ்சி
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை நோக்கி எதிர்த்து போராடி நமக்கு வறட்டு இருமல் வராமல் பாதுகாக்கிறது. மேலும் இஞ்சியில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. வறட்டு இருமல் சரியாக இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். இஞ்சியை தண்ணீரில் தட்டி போட்டு கொதிக்க வைத்து அதில், எலுமிச்சை கலந்து குடிப்பது சிறப்பான பலன்களைத் தரும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருமலை போக்க உதவுகிறது. இருமலுக்கு இஞ்சி கஷாயம் மிகவும் நன்மை பயக்கும். இது தொண்டை எரிச்சல் மற்றும் வலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.
தேன்
தேன் இருமலுக்கு நிவாரணம் தரும். எலுமிச்சம் பழத்துடன் தேன் கலந்து குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சூடான பால் கலக்காத தேநீரில் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.
கருமிளகு
கருப்பு மிளகு இருமலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் உள்ள சத்துக்கள் வறட்டு இருமலை நீக்க உதவுகிறது. கருப்பு மிளகை தேன் அல்லது கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | இந்த 7 விஷயங்கள் செய்தால் போதும்..அடி வயிறு தொப்பை ஐஸ் போல் கரையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ