உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடல் எடையை குறைக்கவும் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடிக்கின்றனர். பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்த தேன் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, இதனை சாப்பிடுவதால் தொற்றுநோய்கள் ஆபத்து ஏற்படாது. இது தொண்டை புண் முதல் முடி உதிர்தல் வரையிலான பல வகையான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. மேலும் இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகவும் உள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வெதுவெதுப்பான நீரில் தேனுடன் குடிப்பதால் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது, இதில் பிரபலமாக அறியப்படுவது உடல் எடை குறைவது தான். வெதுவெதுப்பான நீரில் தேனை குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அல்லது பிற உடல் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஒவ்வொரு வாரமும் 2 பவுண்டுகள் வரை இழக்க உதவும்.
மேலும் படிக்க | அதிகமாக உப்பை சாப்பிட்டால் உண்டாகும் பிரச்னைகள்... ரொம்ப கவனமா இருங்க!
இரவில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது, ஏனெனில் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் வயிற்றில் அமிலத்தை குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடல் ஹைட்ரேட்டாகவும், குடலை மென்மையாக்கவும், குடல் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் செய்து மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாகும். தேன் இருமலை போக்கும் சிறந்த மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக மேல் சுவாச தொற்று உள்ள குழந்தைகளுக்கு தேன் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. குடல் இயக்கத்தைத் தூண்டவும், பெருங்குடலை ஈரப்படுத்தவும் தேவையான அளவு தண்ணீருடன் தேன் கலந்து குடிக்கலாம். தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
வெதுவெதுப்பான நீருடன் தேனை கலந்து குடிப்பதற்கான சிறந்த நேரம் ஒவ்வொரு நபரின் உடல்நலத்தை பொறுத்து மாறுபடுகிறது. இருப்பினும் பொதுவாக காலை வேலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை இழப்புக்கு உதவவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. காலை நேரம் தவிர இரவில் தூங்கபோவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நல்லது. இது தொண்டைக்கு இதமளிக்கவும், தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! ஆண்களை அதிகம் பாதிக்கும் வயிற்று புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ