உடல் எடை குறையணுமா? மஞ்சள் நீர் குடிங்க.. சட்டுனு குறையும்!!

Weight Loss: அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2023, 01:58 PM IST
  • மஞ்சள் நீரில் பாலிபினால்கள், குர்குமின் கலவைகள் உள்ளன.
  • மஞ்சள் தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் காலை நேரமாகும்.
  • உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
உடல் எடை குறையணுமா? மஞ்சள் நீர் குடிங்க.. சட்டுனு குறையும்!!  title=

எடை இழப்புக்கு மஞ்சள் நீர்: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகரித்து வரும் உடல் பருமன், உடல் எடையை குறைக்க, காலை உடற்பயிற்சி முதல் உணவு கட்டுப்பாடு வரை அனைத்து வித முயற்சிகளையும் எடுக்கிறார்கள். எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க மஞ்சள் நீர் ஒரு நல்ல வைத்தியமாக இருக்கும். உடல் எடையை குறைப்பதில் மஞ்சள் நீரின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

முகத்தில் பளபளப்பைக் கொண்டுவர அல்லது காயத்தில் இருந்து நிவாரணம் பெற நாம் பொதுவாக மஞ்சளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் எடை இழப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம். இந்த பதிவில், உங்கள் எடையைக் குறைக்க மஞ்சள் நீர் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

மஞ்சள் நீர் உடல் எடையை குறைக்கும் அருமருந்து

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் மஞ்சளில் உள்ளன. இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிப்பதால், உங்கள் அதிகப்படியான கொழுப்பை விரைவில் கரைக்கலாம். 

மஞ்சள் நீரில் பாலிபினால்கள், குர்குமின் கலவைகள் உள்ளன, இது வளர்சிதை மாற்ற வீக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் காலை நேரமாகும். உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். 

மேலும் படிக்க | அடிவயிற்றில் தொங்கும் தொப்பை குறையுமா? இந்த மசாலாவை உட்கொள்ளுங்கள்

பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு, மஞ்சள் நீர் ஒரு சஞ்சீவியாகவே பயன்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இதை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த வழியில் உட்கொள்ளலாம்: 

எடை இழப்புக்கு மஞ்சள் தண்ணீரை எப்படி தயாரிப்பது என்பதும் மிக முக்கியமான விஷயமாகும். இதை செய்ய, இரண்டு கப் தண்ணீரில் ஒரு கட்டி மஞ்சளை கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை ஒரு கப் தண்ணீர் ஆகும் அரை கொதிக்க வைக்க வேண்டும். இதற்குப் பிறகு, தண்ணீரை வடிகட்டவும். இப்போது இந்த தண்ணீரில் சிறிது தேன் கலக்கவும். உங்களுக்கு நீரில் இனிப்பு சுவை தேவை இல்லை என்றால், தேனுக்கு பதிலாக, உப்பு மற்றும் கருப்பு மிளகு மட்டும் சேர்க்கவும். 

மஞ்சள் தண்ணீர் தயாரிக்கும் போது, ​​மஞ்சள் கட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மஞ்சள் நீரை எளிதாக இந்த முறையில் தயார் செய்யலாம். காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளுங்கள். இந்த வீட்டு வைத்தியத்தை தினமும் செய்து பாருங்கள். விரைவில் உடல் எடை குறைவதை நீங்கள் காண்பீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கறும்பு ஜூசின் கலக்கல் நன்மைகள்: கோடை காலத்தில் உங்க பெஸ்ட் பிரெண்ட் இதுதான்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News