சுலபமாக கிடைக்காத பனை தவுன்! ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தவுண் தற்போது விற்பனையில்!!
மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரத்தின் அற்புதமான கொடைகளில் ஒன்று தவுன். பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுன், எப்போதும் கிடைக்காத அருமையான இயற்கை உணவு.
மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரத்தின் அற்புதமான கொடைகளில் ஒன்று தவுன். பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுன், எப்போதும் கிடைக்காத அருமையான இயற்கை உணவு.
வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் இந்த கவுன், பனங்கொட்டையிலிருந்து எடுக்கப்படுவது. ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே தவுன் கிடைக்கும்.
பனம்பழங்களிலிருந்து எடுக்கப்படும் கொட்டை அல்லது பனம்விதைகளை நான்கு மாதங்களுக்கும் மண் குவியலில் போட்டு வைப்பார்கள். பொங்கல் சமயத்தில் பனங்கிழங்குக்காக வெட்டி எடுக்கப்பட்டு, அதன் உள்ளிருக்கும் தவுன் திகட்டாத சுவை மட்டுமல்ல, அற்புதமான ஆரோக்கிய நலன்களையும் (Health Benefits) கொண்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் தற்போது மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது, பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Also Read | வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா?
இவற்றை சாயல்குடி அருகேயுள்ள 'நரிப்பையூர் செவல்' என்ற இடத்தை சேர்ந்த பனைத்தொழிலாளர் இளைஞர் குழுவினர் விற்பனை செய்கிறார்கள்.
நன்கு படித்தவர்கள், டாக்டர்கள் என பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு அருமருந்து (Medicinal Benefits) தவுன் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாகவும் இருக்கும் தவுன் விற்பனையுடன் நுங்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய அளவுக்கு லாபம் இல்லை என்றாலும், உடல்நிலையை ஆரோக்கியமாக பேணி காக்கும் இயற்கையான உணவுகள் உடலுக்கு மிகவும் ஏற்றவை.
வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள் என்பதும், 90 அடி உயரம் வளரக்கூடியது என்பதும் இதன் சிறப்பு.
READ ALSO | பெண்களின் ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறும் லிச்சி
பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது, அதில் கிடைக்கும் பச்சைக் குருத்து உண்ண சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். வீடுகளில் கூரை வேயவும், படுக்கவும், உட்காரவும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பனை ஓலை பயன்படுகிறது.
கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள் குளுமையான காற்று தருபவை.
பனைமர பாளையிலிருந்து கிடைக்கும் பதநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சித் தருவது. அதில் சுண்ணாம்பு கலக்காமல் விட்டால், அது சுவையானதாகவும், இயற்கையான, ‘கள்’ என்ற பானம் கிடைக்கும்.
பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.
பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுண்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
ALSO READ | நரம்பு கோளாறுகளை குணப்படுத்தும் பழம்! சருமத்தை பளபளக்க செய்யும் அழகுப் பழம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR