Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்
உலகம் கொரோனாவை (Corona Virus) ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா, அடுத்த வைரஸை உலகிற்கு அனுப்ப தயாராகி விட்டது. சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
உலகம் கொரோனாவை (Corona Virus) ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா, அடுத்த வைரஸை உலகிற்கு அனுப்ப தயாராகி விட்டது. சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
Monkey B Virus: மங்கி பி வைரஸ் (BV) என்றால் என்ன?
குரங்கு பி.வி வகை வைரஸ் மக்காக்ஸ் ( macaques) என்னும் வகை குரங்குகளில் இயற்கையாகவே காணப்படுகிற்து . இந்த வைரஸ் மக்காக்ஸ் வகை குரங்குகள் மூலம் பரவுகிறது, சிம்பன்சிகள் மற்றும் கபுச்சின் குரங்குகள் மூலமும் இந்த வரஸ் பரவலாம். பி வைரஸ் பொதுவாக ஹெர்பெஸ் பி (herpes B), குரங்கு பி வைரஸ், ஹெர்பெஸ்வைரஸ் சிமியா (herpesvirus simiae) மற்றும் ஹெர்பெஸ்வைரஸ் பி (herpesvirus B) என்றும் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இது குறித்து கூறுகையில், பி வைரஸ் நோய்த்தொற்றுகள் அரிதானவை என்றும், 1932 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, வெறும் 50 பேரை மட்டுமே பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் 21 பேர் மட்டுமே இறந்தனர் எனவும் கூறப்படுகிறது.
சீன அறுவை சிகிச்சை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனித பரவல் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்ப்ட்டதாக இது வரை கண்டறியப்படவில்லை. 1932ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட போது, பாதிக்கப்பட்ட 50 பேருக்கும், குரங்குகள் கடித்ததால், கீறியதால் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.
இந்த வைரஸ் குரங்கின் உமிழ்நீர், மலம், சிறுநீர், மூளை அல்லது மாகேக்கின் முதுகெலும்பு திசுக்களில் காணப்படுகிறது. பொதுமக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், கால்நடை தொடர்பான ஆய்வகத் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், குறிப்பாக குரங்குகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது.
ALSO READ | China: இன்னும் கொரோனாவே முடியவில்லை; அதற்குள் பீதியை கிளப்பும் Monkey B வைரஸ்
மங்கி பி வைரஸின் அறிகுறிகள் என்ன?
கொரோனா வைரஸைப் போலவே, குரங்கு பி வைரஸின் முதல் அறிகுறி காய்ச்சல் தான். இதில் காய்ச்சல் மற்றும் குளிர், தசை வலி, சோர்வு, தலைவலி ஆகியவை அடங்கும். காலப்போக்கில், வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு காயத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகக்கூடும். மற்ற அறிகுறிகளில் மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, விக்கல் ஆகியவை அடங்கும்.
ALSO READ | Monkeypox: 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை அச்சுறுத்தும் அரிய வகை நோய்
நோய் மோசமடைகையில், வைரஸ் மூளை மற்றும் முதுகெலும்புகளில் வீக்கத்ம் ஏற்பட வழிவகுக்கும், இதன் விளைவாக நரம்பியல் மற்றும் அழற்சி அறிகுறிகள், தசைகள் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மூளை பாதிப்பு மற்றும் நரம்பு மண்டலத்திற்கு கடுமையான சேதம் ஆகியவை ஏற்பட்டு இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும். தொற்று ஏற்பட்ட ஒரு நாள் முதல் மூன்று வாரங்கள் வரை அறிகுறிகள் வேறுபடலாம்.
மாங்கி பி வைரஸ் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
தற்போது, குரங்கு பி வைரஸை (Monkey B Virus) எதிர்கொள்ள தடுப்பூசி இல்லை. சரியான நேரத்தில் கொடுக்கப்படும் பொதுவான வைரஸ் தடுப்பு மருந்துகள் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும்.
குரங்கு கடித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து. மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காயத்தை சோப்பு அல்லது அயோடின் மூலம் 15 நிமிடங்கள் கழுவி மெதுவாக துடைக்கவும். மேலும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு காயம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.
ALSO READ | Germany: பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளம், பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR