அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!
அஸ்வகந்தா என்ற மூலிகை பல வகைகளில் நன்மை பயக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதை சாப்பிடும் போது எச்சரிக்கை தேவை. ஏனென்றால், அது சிலருக்கு விஷமாக மாறக் கூடும்.
அஸ்வகந்தா என்ற ஒரு மூலிகை பல நோய்களுக்கு மருந்தாகிறது. அஸ்வகந்தாவின் பல பயன்பாடுகள் குறித்து ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. உடல் எடையை குறைத்தல், உடலுக்கு வலு சேர்த்தல் ஆகியவற்றுக்கு அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் இலைகளை தேய்த்தால், குதிரை சிறுநீர் போல நாற்றம் வரும். எனவே அதன் பெயர் அஸ்வகந்தா.
அஸ்வகந்தா என்ற மூலிகை பல வகைகளில் நன்மை பயக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதை சாப்பிடும் போது எச்சரிக்கை தேவை. ஏனென்றால், அது சிலருக்கு விஷமாக (Poison) மாறக் கூடும். அஸ்வகந்தாவை யார் யார் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்து விபரமாக பார்க்கலாம்.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
கர்ப்பிணிப் பெண்கள் (Pregnant Women) அஸ்வகந்தத்தை உட்கொள்ளக்கூடாது - அஸ்வகந்தாவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. அஸ்வகந்தா கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உண்டாகும்.
குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் உட்கொள்ளக் கூடாது - குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளை மறந்தும் கூட அஸ்வகந்தாவை உட்கொள்ளக்கூடாது. இதனால் இரத்த அழுத்தம் மேலும் குறையும் ஆபத்து உள்ளது. நீங்களும் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், மருத்துவரை ஆலோசனைக்கு பின்னரே அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வயிற்றுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்- உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் நோய்கள் இருந்தால், நீங்கள் அஸ்வகந்தாவை உட்கொள்ள கூடாது. வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான நோய்களால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் மறந்தும் கூட அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளக்கூடாது.
ALSO READ | நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சி முட்டை பாதுகாப்பானது: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR