நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சி முட்டை பாதுகாப்பானது: மத்திய அரசு

நன்றாக சமைக்கப்பட்ட சிக்கன் மற்றும் முட்டை பாதுகாப்பானதுதான்  என கூறியுள்ள மத்திய அரசு,  கோழி விற்பனை மீதான  தடையை  பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2021, 12:42 PM IST
  • கோழி விற்பனை மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
  • நாட்டில் பறவை காய்ச்சலால் மத்திய குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சி முட்டை பாதுகாப்பானது: மத்திய அரசு

நன்றாக சமைக்கப்பட்ட சிக்கன் மற்றும் முட்டை பாதுகாப்பானதுதான்  என கூறியுள்ள மத்திய அரசு,  கோழி விற்பனை மீதான  தடையை  பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

நன்கு சமைத்த கோழி, முட்டை மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்றும், நுகர்வோர் அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளுக்கு செவிசாய்க வேண்டாம் என்று மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் (FAHD)  கூறியுள்ளது..

அதனால், கோழி விற்பனை மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு (Central Government) மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது, மேலும் நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் இருந்து  வந்துள்ள கோழிகளளின் விற்பனையை அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

நாட்டின் பறவை காய்ச்சலால் (Bird Flu) பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மத்திய குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  மேலும், பறவை காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்ஃப்வை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் இது குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன. 

இதற்கிடையில், மகாராஷ்டிராவில்(Maharashtra), பர்பானி மற்றும் பீட் மாவட்டங்களில் இரண்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட இறந்த கோழிகளின் மாதிரிகள் மூலம், அவற்றிற்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேறும் சுமார் 2,000 கொல்லப்பட்டன.

ஜனவரி 16 வரை, மகாராஷ்டிராவின் லாத்தூர், பர்பானி, நாந்தேட், புனே, சோலாப்பூர், யவத்மால், அகமதுநகர், பீட் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ALSO READ | COVAXIN கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தினால் இழப்பீடு வழங்கப்படும்: Bharat BioTech

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News