Reverse Dieting என்றால் என்ன? இதனால் உடல் எடை குறையுமா?
Reverse Dieting: உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. பொதுவாக பார்த்தால், இதற்கு 2 காரணங்கள் உள்ளன- மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்கள்.
ரிவர்ஸ் டயட்டிங்கை பின்பற்றுவது எப்படி: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. பொதுவாக பார்த்தால், இதற்கு 2 காரணங்கள் உள்ளன- மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்கள். இன்றைய அவசர வாழ்க்கையில், மக்கள் தூங்குவதற்கும், எழுந்திருப்பதற்கும், சாப்பிடுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை. இதன் காரணமாக, எடை அதிகரிக்கத் தொடங்குகிறது.
இது தவிர, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதும் எடை அதிகரிப்பதற்கு காரணமாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எடை குறைப்புக்கு உதவக்கூடிய ரிவர்ஸ் டயட்டிங் பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் அதிகரித்து வரும் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். ரிவர்ஸ் டயட்டிங் என்றால் என்ன? அது எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது? இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ரிவர்ஸ் டயட்டிங்கை எவ்வாறு பின்பற்றுவது?
ரிவர்ஸ் டயட்டிங்கில் நாம் படிப்படியாக கலோரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள். அதன் பிறகு, உங்கள் எடை எவ்வளவு? உடலில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா இல்லையா? என்பதைப் பாருங்கள். உங்கள் உடல் முன்பு போலவே இருந்தால், உங்கள் உணவில் 100 முதல் 150 கலோரிகளை இன்னும் அதிகரிக்கவும்.
இந்த செயல்முறையை நீங்கள் 3 முதல் 5 வாரங்களுக்கு பின்பற்ற வேண்டும். பிறகு எடை அப்படியே இருக்கிறதா அல்லது குறைகிறதா என்று பார்க்கவும். நீங்கள் எடையில் ஏதேனும் மாற்றத்தைக் கண்டால், உங்கள் உணவில் இருந்து அதிகரித்த கலோரிகளைக் குறைக்கவும்.
இந்த டயட்டை, அதாவது உணவுக்கட்டுப்பாட்டு முறையை பின்பற்றி உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். நீங்கள் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால், நீண்ட நேரம் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் உடல் சோர்வாகவும் இருக்காது. இது தவிர, ரிவர்ஸ் டயட்டிங்கை கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் உடலில் உள்ள ஆற்றலின் அளவும் பராமரிக்கப்படுகிறது. இதனுடன், உங்கள் செறிவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Ayurvedic Herb: சிறுநீரக பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் அஷ்வகந்தா & நெருஞ்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ