சமூக வலைத்தளங்களில் நமக்கு தேவையான பல விஷயங்கள் உள்ளது. நமது உடல் ஆரோக்கியத்தை பேணி, அழகை பராமரிக்க, தொழில் சம்மந்தமான ஐடியாக்களை பெற மற்றும் கல்வி சம்மந்தமான தகவல்களை பெற என அனைத்து விதமான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் நிறைந்துள்ளது. நமது உடல் ஆரோக்கியத்தை பேண சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் பதிவுகள் தான் அதிகளவில் மக்களின் கவனத்தை கவர்ந்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்பதற்கென்றே தனி கூட்டம் உள்ளது, அதில் பல வீடியோக்கள் ட்ரெண்டாகவும் செய்கிறது. அதுபோன்ற ஒரு வீடியோவில் எலுமிச்சை, தண்ணீர் மற்றும் உப்பு கலந்த பானம் ஒருவரது உடலுக்கு எந்தளவுக்கு நன்மையினை செய்கிறது என்பதை காட்டுகிறது. இந்த பானத்தை அருந்துவதால் ஒருவருக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க | ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும் உணவுகள் இவை தான்..! தினசரி சாப்பிடுங்கள்
பெரும்பாலான மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்போது அவர்களின் உடல் டீஹைட்ரேட் ஆகிவிடுகிறது. அதனால் காலையில் எழுந்ததும் தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை கலந்த புத்துணர்ச்சி தரும் பானத்துடன் உங்களது நாளை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த பானத்தை நீங்கள் குடிக்கும்போது உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருக்கும் மற்றும் உங்களது செரிமான மண்டலமும் சிறப்பாக இருக்கும். சிறிது எலுமிச்சையை பிழிந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இந்த பானத்தை தயாரிக்க வேண்டும். இந்த பானத்தை குடிக்கும்பொழுது நீங்கள் குளிர்ந்த நீர் எதையும் அருந்தாமல் இருப்பது நல்லது. இந்த பணம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய துடிப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகும், இதனை நீங்கள் பருகும்போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படுகிறது.
எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது. இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது. எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உப்பில் உள்ள சோடியம் குளோரைடை சமன் செய்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின்-சி உடலில் குளுடோதயான் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கணுமா? இதை சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ