White Hair Solution: வெரி சிம்பிள்! உங்கள் நரை முடி கருமையாக மாற இதை செய்யுங்கள்!
White Hair Solution: நரைத்த முடியை கருப்பாக என்ன செய்ய வேண்டும்? எளிய வீட்டு வைத்தியம் மூலம் இயற்கை முறையில் வெள்ளை முடி கருப்பாக மாற்ற வழிகள் குறித்து பார்ப்போம்.
நரைத்த முடி பிரச்சனைக்கு தீர்வு: இப்போதெல்லாம் சிறு வயதிலேயே பலருக்கு நரைத்த முடி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தான். நரைத்த முடியை மீண்டும் கருப்பாக மாற்ற மக்கள் பல இரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது பல நேரங்களில் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எளிய ஒரு சில வீட்டு வைத்தியத்தை பின்பற்றி நரைத்த முடியை இயற்கையான முறையில் கருப்பாக்க முடியும்.
நரைத்த முடியை இயற்கை முறையில் கருமையாக்கலாம்:
வெள்ளை முடியை கருமையாக்க, சாயம் அல்லது வண்ணம் பூசுவதற்குப் பதிலாக, மற்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய் வெள்ளை முடியை கருப்பாக்குவதற்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. கடுகு எண்ணெயில் மருதாணி பொடியை கலந்து முடிக்கு மசாஜ் செய்வதன் மூலம் வெள்ளை முடிக்கு வலுவூட்டுவது மட்டுமின்றி, வேரில் இருந்து கருப்பாகவும் மாறும்.
மேலும் படிக்க - நரை முடியால் இம்சையா? அப்போ இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
முடியை கருமையாக்க ஸ்பெஷல் எண்ணெய்:
ஆயுர்வேதத்தின் படி, கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம், வழுக்கை நீங்குவதுடன், கூந்தலை வலுவாகவும், கருப்பாகவும் மாற்றலாம். இந்த சிறப்பு எண்ணெயை மிகவும் பயனுள்ளதாக மாற்ற, 1 கப் கடுகு எண்ணெய் மற்றும் 3 டீஸ்பூன் மருதாணி தூள் அல்லது இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது எண்ணெய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஸ்பெஷல் எண்ணெய் செய்வது எப்படி?
1. கேஸ் மீது இரும்பு வாணலியை வைத்து அதில் கடுகு எண்ணெயை ஊற்றவும்.
2. எண்ணெயைச் சூடாக்கிய பிறகு, மருதாணி தூளை சேர்க்கவும்.
3. கொதி வரும் வரை எண்ணெயை கிளறவும், தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
4. எண்ணெய் முற்றிலும் கருப்பாக மாறியதும் கேஸ் ஐ அணைக்கவும்.
5. எண்ணெய் பாத்திரத்தை 1 மணி நேரம் மூடி வைக்கவும். எண்ணெய் குளிர்ந்த பிறகு, அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பு வாரம் ஒரு முறை முடியில் தேய்த்து வரவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க - நரை முடிக்கு டை பயன்படுத்துனா, அப்போ இந்த இயற்கையான "டை" ட்ரை பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ