புதுடெல்லி: பல்கிப் பெருகும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போடப்ப, டும் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வரமே சாபமாகும் என்பது பழங்கால வழக்குமொழி அல்ல என்பதை அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் நிரூபிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மில்லியன் கணக்கானவர்களில் ஒரு சிலருக்கு மிகவும் அரிதான ஆனால் தீவிரமான ரத்தக் கட்டிகள் ஏற்படுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.  


அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி (AstraZeneca vaccine) போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்படும் ரத்த கட்டிகள், தடுப்பூசிகள் போடாதவர்களுக்கு ஏற்படுவதை விட அதிகமாக இருக்கிறதா? ஆம் என்றால் அதற்கான காரணம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.


Also Read | சூரிய ஒளி கொரோனா வைரஸைக் கொல்லுமா; மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?


ஒரே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு தடுப்பூசிகள் இவை. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மிகவும் அரிதாக ரத்தக் கட்டிகள் ஏற்படுவதாகவும், இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐரோப்பிய மருந்துகள் சங்கம் (European Medicines Agency) கடந்த வாரம் கூறியது.


ஆனால், கோவிட் -19 (Covid-19) நோய்த்தொற்றை தடுப்பதில் உள்ள நன்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஒட்டுமொத்த நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக இருப்பதை ஐரோப்பிய மருந்துகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு பெருமூளை சிரை சைனஸ் த்ரோம்போசிஸ் (cerebral venous sinus thrombosis (CVST)) என அழைக்கப்படும் மூளையில் உள்ள நரம்புகளிலும், அடிவயிறு மற்றும் தமனிகளிலும் ரத்தம் உறைந்து போகும் பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.  


Also Read | தமிழகத்தில் 6711 பேருக்கு கொரோனா தொற்று, தீவிரமாகும் மாநில அரசின் நடவடிக்கை


ரத்தக் கட்டிகள் உடலில் எந்த இடத்தில் தோன்றும் என்பது வித்தியாசமாக இருக்கிறது. இந்த ரத்தக் கட்டிகள் ரத்தம் உறைவதற்கு உதவும் ரத்த பிளேட்லெட்டுகளில் (blood platelets) பாதிப்பு ஏற்படுத்துகிறது. ரத்தம் உறைந்து கட்டிகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் நோயாளிக்கு ரத்தக்கசிவையும் ஏற்படுத்துகிறது.


ஒரு இடத்தில் ரத்தத்தை உறைய வைத்து கட்டியை ஏற்படுத்துவதும், அதற்கு முரண்பாடாக, ரத்தக் கசிவையும் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.  


ஐரோப்பிய பொருளாதார பகுதி (EU, Iceland, Norway, Liechtenstein) மற்றும் பிரிட்டனில் 34 மில்லியன் பேருக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்டது. அதில் 222 பேருக்கு ரத்த உறைவு அல்லது ரத்தக் கசிவு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஈ.எம்.ஏ தெரிவித்துள்ளது. மார்ச் 22 நிலவரப்படி 18 பேர் இறந்துள்ளனர். 


Also Read | கொரோனா நிலைமை மேம்படும் வரை Remdesivir ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை


தடுப்பூசி போட்ட இரண்டு வாரங்களுக்குள் ஏற்பட்ட இந்த பிரச்சனை பெருமளவில் 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கே ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், 6.8 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு ஒரு முறை மட்டுமே போடப்படும் J&J தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், 8 பேருக்கு ரத்த பிளேட்லெட்கள் குறைந்துள்ளன.


இந்த பிரச்சனை 18 முதல் 48 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த இரண்டு தடுப்பூசிகளும், ரஷ்ய Sputnik V jab, "வைரஸ் திசையன்" ("viral vector") என்று அழைக்கப்படும் ஒரு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.


தடுப்பூசிகள் ஒரு பொதுவான-குளிர்ச்சியை ஏற்படுத்தும் அடினோவைரஸைப் பயன்படுத்துகின்றன. எனவே இது மனித திசுக்களில் மரபணு வழிமுறைகளை அடைக்க ஒரு "திசையன்" ஆக, கொரோனா வைரஸின் புரதத்தை உருவாக்கச் செய்கிறது.


Also Read | Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR