கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 839 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதிக்கு பிறகு மிகவும் அதிகபட்ச இறப்பாகும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 11,08,087 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா (Corona Virus) நிலைமை மேம்படும் வரை ரெம்டெஸிவிர் ஊசி ஏற்றுமதியை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்திய அரசு, ஞாயிற்றுக்கிழமை இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரெம்டெஸிவிர் ஊசி மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ள மத்திய அரசு, நாட்டில் கொரோனா நிலைமை மேம்படும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் இருப்பு குறித்த தகவலை சேகரிக்குமாறு மருந்து ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நாட்டில் COVID-19 பரவல் நிலைமை மேம்படும் வரை ரெமடெஸிவிர் ஊசி மற்றும் ரெமிடிஸ்விர் மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன் உத்தரவில், ரெம்டெஸிவிர் மருந்து வைத்திருக்கும் அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களும், தங்களிடம் உள்ள மருந்தின் இருப்பு குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது. மருந்து பரிசோதகர்களுக்கும், இருப்புகளை சரிபார்த்து, கள்ள சந்தை மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களின் சுகாதார செயலாளர் மருந்தின் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்வார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -5 தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கலாம்: Dr Reddy's
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR