இடுப்பு கொழுப்பை ஈசியா குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணுங்க
Weight Loss Tips: தண்ணீர் குடிப்பது இடுப்பு கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மிகச்சிறந்த பலன்களை அளிக்கும்.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது இந்நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனையாகியுள்ளது. உடலின் பல இடங்களில் கொழுப்பு குவியத் தொடங்குகிறது. முக்கியமாக தொப்பை. தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளில் குவியும் கொழுப்பு அவ்வளவு எளிதாக குறைவதில்லை. பொதுவாக, கொழுப்பைக் குறைக்க விரும்பினால், உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்பதைப் பொறுத்து வெவ்வேறு உடற்பயிற்சிகள் செய்யப்படுகின்றன. எனினும், உடற்பயிற்சி செய்யாமலும் இடுப்பு கொழுப்பை குறைக்க முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
பொதுவாகவே உடலில் எந்த பகுதியில் இருந்தாலும். கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். ஒரே ஒரு பகுதியின் எடையைக் குறைக்க, தொழில்முறை உதவியை பலர் நாடுகிறார்கள். எனினும், உடற்பயிற்சியின்றியும் இடுப்பு கொழுப்பை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக உங்கள் வாழ்க்கை முறை தொடர்பான தீய பழக்கங்களை கைவிட வேண்டும். இதுமட்டுமின்றி, உணவில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இடுப்பு கொழுப்பைக் குறைக்க உதவக்கூடிய சில இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
போதுமான தண்ணீர் குடிக்கவும்
இடுப்பு கொழுப்பைக் குறைக்க, தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் எளிதாக வெளியேறும். இது தோல், மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தண்ணீர் குடிப்பது இடுப்பு கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மிகச்சிறந்த பலன்களை அளிக்கும். மூலிகை நீர் குடிப்பதாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் உடல் எடை வேகமாக குறைந்து கொழுப்பும் வேகமாக எரிக்கப்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இரத்தத்தின் pH அளவை மேம்படுத்துகிறது. சரும ஆரோக்கியத்திலும் இதனால நல்ல விளைவுகள் தெரியும். இடுப்பு கொழுப்பை குறைப்பதில் எலுமிச்சை நீர் பெரிய அளவில் உதவும். இதனை தினமும் குடிப்பதால் உடல் பருமன் குறையும், இடுப்பு கொழுப்பை படிப்படியாக குறைக்கவும் உதவும்.
மேலும் படிக்க | பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் 5 நன்மைகள்! இவங்க சாப்பிட வேண்டாம்
உணவில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும்
உடல் கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். இதனுடன், நாம் என்ன சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். பல விதமான வைட்டமின்கள், மினரல்கள், ஆரோக்கியான கொழுப்பு, ஆகியவை நிறைந்த சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் சாலட், பருவகால பழங்கள், காய்கறிகள், முளைகள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இது உங்கள் இடுப்பு கொழுப்பையும் பாதிக்கிறது.
கிரீன் டீ குடிக்கவும்
கிரீன் டீ உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது. தொப்பை கொழுப்பு (Belly Fat), இடுப்பு கொழுப்பு ஆகியவற்றை எரிக்க கிரீன் டீயைக் குடிக்கலாம். உங்கள் உடல் கொழுப்பு தொடர்ந்து குறைவதால், உங்கள் இடுப்பு கொழுப்பும் குறைய ஆரம்பிக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது போதுமான உறக்கம், சரியான நேரத்தில் உணவு, சரியான அளவில் உணவு, போதுமான அளவு தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது இடுப்பு கொழுப்பை குறைக்க மிக உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | டீயில் உப்பு போட்டு குடிச்சு பாருங்க... இத்தனை நன்மைகள் இருக்காம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ