Causes, Symptoms and Prevention of Liver Cirrhosis: நமது உடலின் மிகப் பெரிய உறுப்பான கல்லீரல், உடலின் சுத்திகரிப்பு தொழிற்சாலை என்று அழைத்தால் மிகையில்லை. உடலில் உள்ள கழிவுகள் நச்சுக்கள் ஆகியவற்றை நீக்குவது, ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பணிகளை செய்யும் கல்லீரல், தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது. தொற்று பாதிப்பு ஏற்பட்டால், தானே சரி செய்து கொள்ளும் கல்லீரலை கூடிய ஒரு நோய் கல்லீரல் வீக்கம். அதாவது லிவர் சிரோசிஸ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லிவர் சிரோசிஸ் அல்லது கல்லீரல் வீக்கம் என்றால் என்ன


கல்லீரல் வீக்கம் என்பது, அதிக அளவில் கல்லீரலில் கொழுப்பு சேர்வதாலும், அதிக அளவில் ஆல்கஹால் அருந்துவதாலும், ஹெபடைடிஸ் பி போன்று தொற்று நோய்களாலும் ஏற்படும் ஒரு பாதிப்பு. தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது கல்லீரல் என்றாலும், அது தாங்கிக் கொள்ளும் அளவை விட பெரிதான தாக்கம் ஏற்படும் போது தான், கல்லீரல் வீக்கம் உருவாக ஆரம்பிக்கும். கல்லீரல் வீக்கம் அதிகமாகி, பாதிப்படைவதை லிவர் சரோசஸ் என்கிறோம். கல்லீரல் பாதிப்பு தீவிரமடைய பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், நோய் முற்றிய நிலையை அடையும் வரை அதன் அறிகுறிகள் தெரியாது என்பதுதான் மிகவும் ஆபத்தான விஷயமாகும்.


கல்லீரல் வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்


கல்லீரல் வீக்கம் ஏற்பட முதலாவது காரணமாக கூற வேண்டும் என்றால், நமது மோசமான உணவு பழக்க வழக்கம், மற்றும் உடல் உழைப்பு இல்லாத நிலை. உடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்தும் கல்லீரலிலேயே கொழுப்பு சேரும்போது அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் மது அருந்துவது, கல்லீரல் வீக்கம் ஏற்பட மிக முக்கிய காரணம். மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்பு இருப்பதை தெரிந்து கொண்டால், அந்தப் பழக்கத்தை உடனே நிறுத்தி விட வேண்டும். இப்படிச் செய்தால் கல்லீரல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு, பிரச்சனைகள் தீர்ந்து சரியாகிவிடும்.


கல்லீரலை பாதிக்கும் ஹெபடிடிஸ் பி அல்லது சி தொற்று 


அடுத்தபடியாக காரணம் தொற்று. ஹெபடிடிஸ் பி அல்லது சி தொற்று காரணமாக கல்லீரல் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்தத் தொற்றையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாது. முற்றிய பின்னரே தெரியவரும். இது சிறியவர்களுக்கு கூட வரலாம். எனினும் இன்றைய காலகட்டத்தில், ஹெபடிடிஸ் பி அல்லது சி ஆகிய இரண்டையும், குணப்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள் கை கொடுக்கும். 


மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!


உணவு பழக்கமும் கல்லீரல் பாதிப்பும்


இன்றைய மோசமான உணவு பழக்கமும் கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணம். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கல்லீரலில் பாதிப்பை உண்டாக்குவது கொழுப்பு மிக்க உணவினால் அல்ல. அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகள் தான். உடலில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சேரும் போது, அது கொழுப்பாக மாறுகிறது. இந்த நிலையை தான் கொழுப்பு கல்லீரல் அதாவது ஃபாட்டி லிவர் (Fatty Liver)  என்று கூறுவார்கள்.


கல்லீரல் வீக்கத்திற்கான அறிகுறிகள்


ஆரம்பகட்டத்தில், கல்லீரல் வீக்கத்திற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. ஏனென்றால் கல்லீரல் தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயற்சிக்கிறது. எனவே விஷயம் கை மீறி போகும் போது தான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கிறது. உடல் மெலிதல், ஞாபக சக்தி குறைதல், கால் வீக்கம், வயிறு வீக்கம், பசியின்மை, ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.


கல்லீரல் வீக்கத்திற்கான சிகிச்சைகள்


கல்லீரல் வீக்கத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால் சிகிச்சை மூலம் சரி செய்து கொண்டு விடலாம். உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதோடு, மருத்துவர் ஆலோசனைப்படி, அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொண்டு வருவது மிக முக்கியம்.


கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டியவை


கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் இருக்க நாம் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுதல், அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலில் சேருமாறு சமச்சீரான உணவை உண்ணுதல், நம்மால் முடிந்த அளவு தினசரி உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொள்ளுதல், ரத்த சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருத்தல், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைவாக உண்ணுதல், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருத்தல், உடல் பருமன் அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்தல், சுறுசுறுப்பாக இருத்தல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே போதும்.


மேலும் படிக்க | உடல் எடை மளமளவென குறைய தினம் காலையில் நெய்யை இப்படி சாப்பிடுங்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ