Liver: கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்கி வலுப்படுத்தும் ‘சூப்பர்’ உணவுகள்..!!
கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்ற சந்தையில் பல வகை லிவர் டிடாக்ஸ் கிடைக்கிறது என்றாலும், அதனால் பக்க விளைவுகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், செலவில்லாமல் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
Liver detox foods: கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவரும் அறிந்ததே. வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு, செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல், புரதத் தொகுப்பு, , கிளைக்கோசன் சேமிப்பை முறைப்படுத்துதல், பித்த நீரை உருவாக்குதல், ஹார்மோன் உற்பத்தி உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளும் கல்லீரல் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றி சந்தையில் பல வகையான லிவர் டிடாக்ஸ் கிடைக்கிறது என்றாலும், அதனால் பக்க விளைவுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செலவில்லாமல் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வலுப்படுத்தும் இயற்கையான பொருட்களை அறிந்து கொள்ளலாம்.
கல்லீரல் நச்சுக்களை நீக்குதல் ( liver detox) என்றால் என்ன
கல்லீரலை நச்சு நீக்குதல் மற்றும் சுத்தப்படுத்துதல் என்பது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கும், எடையைக் குறைப்பதற்கும் அல்லது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஆன செயல் முறையாகும். அடிக்கடி அலர்ஜி ஏற்பட்டால், உங்கள் கல்லீரலுக்கு டெடாக்ஸ் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் என்ன?
ஊட்டச்சத்து குறைபாடு
பசியின்மை
சோர்வு
செரிமானத்தில் பிரச்சனை
தோல் நிறமாற்றம்
வாயு பிரச்சனை
நெஞ்சு எரிச்சல்
கல்லீரல் நச்சுக்களை நீக்கும் உணவுகள்
1. சூடான நீர் மற்றும் எலுமிச்சை
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழ சாற்றை கலந்து குடிப்பது உங்களுக்கு மிகப் பெரிய ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
2. மஞ்சள்
எலுமிச்சையைத் தவிர, மஞ்சளை உட்கொள்வது கல்லீரிலின் நச்சுக்களை அகற்றுவதில் பெரிதும் நன்மை பயக்கும். மஞ்சள் ஒரு என்சைம் பூஸ்டராக செயல்படுகிறது, இது உணவுடன் வயிற்றுக்குள் சென்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
3. நெல்லிக்காய்
நெல்லிக்காய் சாறு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க வல்லது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
4. கீரை
கீரைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கான இயற்கையான தீர்வாகும். வேண்டுமானால் சாறு எடுத்து அருந்தலாம். இதனை சாதாரண முறையில் சமைத்து சாப்பிடுவதும் நலல் பலனைத் தரும்.
இந்த விஷயங்களை தவிர்க்கவும்
உங்கள் கல்லீரலை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க விரும்பினால், ஜங்க் ஃபுட், சிகரெட், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. )
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR