மனிதர்கள் அனைவருக்குமே நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற அவா இருக்கிறது. இந்த ஆசையை வாழ்வியலில் நாம் செய்யும் சில மாற்றங்களினால் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஒரு சில உடற்பயிற்சிகள் நம் உடலை இளமையாக வைத்திருக்கவும் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்றன அவை என்னென்ன பயிற்சிகள் இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட ஆயுளுக்கு உடற்பயிற்சி உதவுமா? 


கொரோனா பேரிடர் நம் வாழ்வில் பலவித மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு வந்த சுவடு தெரியாமல் சென்றுவிட்டது. ஆனால் அதன் தாக்கம் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நம் வாழ்விலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரோக்கியமான வாழ்வை நடைமுறைப்படுத்துவதில் பலர் திணறி வருகிறோம். உடற்பயிற்சியை பேணுதல், காய்கறி பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை குறைந்து விட்டதாக பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உடலுக்கு கேடு விளைவிக்கும் சில பழக்க வழக்கங்களை களைந்து சிறிதளவு சிரமப்பட்டால் பல நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குவதற்கு முதல் படி முயற்சி செய்வது. அந்த முயற்சியை உடற்பயிற்சியில் இருந்து தொடங்குவது நன்றி என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | இதய தமனிகளை அடைத்து மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தான ‘சில’ உணவுகள்!


நீண்ட ஆயுளுக்கு உதவும் உடற்பயிற்சிகள்: 


1.நடைப்பயிற்சி:


உலகில் உள்ள உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி தான் மிகவும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைப்பயிற்சி, ஹெல்தியான வாழிற்கு வழி வகுப்பது மடுமன்றி, இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறதாம். இது குறித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், அந்த பயிற்சியை பின்பற்றாதவரை விட அதிக நாட்கள் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரமில்லாதோர் வாகனங்கள் உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்து அருகாமையில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது உதவும் என உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றன. மேலும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நடை பயிற்சி உதவும். 


2.நீச்சல்: 


நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது உடலின் ஒரு சில பாகங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த உடலுமே ஆக்டிவாக செயல்படுகின்றன. ஆதலால் நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், நுரையீரல் பாதிப்பு, எதிர்பாராத மரணம் போன்றவற்றையும் நீச்சல் பயிற்சி தவிர்க்கிறது. நீச்சல் பயிற்சி மேற்கொள்கையில், நாம் சுவாச பயிற்சியும் எடுப்பதால், உடலின் உறுப்புகள் யாவும் சீரான பாதையில் இயக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


3.ஏரோபிக் உடற்பயிற்சிகள்:


உடல் எடையை குறைக்க விரும்புவோர், ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால், உடல் எடை குறைப்பை தவிர, வேறு சில உடல் நலன்களை பேனவும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் உதவுகின்றன. ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் உடலும் மனதும் ஆரோக்கியம் பெறும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும், இத ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் உதவுகிறது. இவற்றை தினமும் 15-30 நிமிடங்கள் வரை மேற்கொள்ளலாம். 


4.ஜாக்கிங்:


வாக்கிங் சென்று போர் அடித்தவர்கள், ஜாக்கிங் பயிற்சியினை மேற்கொள்ளலாம். ஜாக்கிங் (ஓட்டப்பயிற்சி) மேற்கொள்வதால், உடல் எடை குறைவது மட்டுமன்றி இதயத்தின் ஆரோக்கியம் கெடாமலும் பார்த்துக்கொள்ளலாம். அனைத்து வகை புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவும் ஜாக்கிங் உதவுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜாக்கிங் பயிற்சி எலும்புகளை வலுவாக்கி இரத்த ஓட்டத்தை சீர் படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால, நம் உடலுக்கு ஏற்ற எடையை நம்மால் சமநிலையில் வைத்திருக்க முடியும் என்றும் இது, நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.


5.சைக்கிள் பயிற்சி:


சைக்கிள் பயிற்சி, உடல் எடையை குறைப்பதற்கும், கொழுப்பை கரைப்பதற்கும் வழி வகை செய்யும் பயிற்சிகளில் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் வாய்ப்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் தன்மையைசைக்கிள் பயிற்சி வளர்ப்பதாக ஒரு சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது, நமது உடலில் உள்ள மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவும். 


மேலும் படிக்க | தொப்பையை குறைக்கணுமா? இந்த பானங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ