Cycling Benefits: சைக்கிள் ஓட்ட பிடிச்சா, கொழுப்பும், நோய்களும் உங்க கிட்டகூட வராது!!

எடை மற்றும் தொப்பையைக் குறைக்க சைக்கிள் ஓட்டுவது, ஜிம்மில் மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்வதைப் போன்ற அதே பலனைத் தரும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 10, 2022, 03:56 PM IST
  • இன்றே சைக்கிளிங் செய்வதை தொடங்குங்கள்.
  • பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.
  • உடல் எடை, தொப்பை குறையும்.
Cycling Benefits: சைக்கிள் ஓட்ட பிடிச்சா, கொழுப்பும், நோய்களும் உங்க கிட்டகூட வராது!! title=

முறையற்ற உணவு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் பெரும்பாலும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றுப்பகுதி மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு வேகமாக உருவாகி நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்குகிறது. 

ஒரு முறை இந்த பகுதிகளில் கொழுப்பு உருவாகி விட்டால், இதை குறைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது. நீங்களும் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு உதவும். 

எடை மற்றும் தொப்பையைக் குறைக்க சைக்கிள் ஓட்டுவது, ஜிம்மில் மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்வதைப் போன்ற அதே பலனைத் தரும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சைக்கிள் ஓட்டுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் இது உடலை வலிமையாக்குகிறது. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க சைக்கிள் ஓட்டுவது அற்புதமாக உதவும். 

சைக்கிள் ஓட்டினால் கலோரிகள் குறையும்

ஒரு ஆய்வின் படி, உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியின் மூலம் ஒரு வாரத்தில் குறைந்தது 2 ஆயிரம் கலோரிகளை எரிக்க முடியும். ஆனால், நிலையான மற்றும் முறைகான வழியில் சைக்கிள் ஓட்டினால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 300 கலோரிகளை எரிக்கலாம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

ஆகையால், நீங்கள் அதிகமாக சைக்கிளிங் செய்தால், கலோரியும் அதிகமாக பர்ண் ஆகி உங்கள் எடையும் அதிகமாகக் குறையும். ஆனால் இதற்கு நீங்கள் சைக்கிள் ஓட்டுவதுடன் ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.

மேலும் படிக்க | சூப்பர் பெருஞ்சீரகம்: பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பெரும் பயன்கள் 

இந்த வழியில், சைக்கிள் ஓட்டுவதை உங்கள் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், பெரிய நன்மைகள் கிடைக்கும்

- நீங்கள் பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றாலோ, பள்ளி அல்லது அலுவலகம் செல்லும்போதோ, எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல, சைக்கிளை பயன்படுத்தலாம். 

- கலோரிகளை எரிக்க உதவுவதோடு, சைக்கிள் ஓட்டுதல் பல தீவிர நோய்களைத் தவிர்க்கவும் உதவும்.

- சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய், மனச்சோர்வு போன்றவற்றை தவிர்க்கலாம்.

- சைக்கிள் ஓட்டுதல் என்பது அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய குறைந்த தாக்கம் கொண்ட ஒரு பயிற்சியாகும்.

- சைக்கிள் ஓட்டுதல் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநல நோய்களைக் குறைக்கும்.

நான் தினமும் எத்தனை மணி நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்?

சைக்கிள் ஓட்டுதல் ஒரு வேடிக்கையான செயல் மட்டுமல்ல, இது உங்கள் தசைகளை வலுப்படுத்தவும், உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் ஒரு சிறந்த பயிற்சியாகும். தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், 300 கலோரிகள் வரை எரிக்க முடியும் என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க | PCOD, PCOS உள்ள பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News