ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், அதை காலையிலேயே தொடங்குவது நல்லது. அதிலும், அதை காலை உணவில் தொடங்கினால் அதிகரித்து வரும் எடையைக் குறைக்கலாம். ஆட்டைகள் இறுக்குமாக ஆரம்பிக்கும்போதே, நமது உடலில் எடை கூடுவதைத் தெரிந்துக் கொள்ளலாம். இந்தியாவில் சுவையான உணவுகளுக்குப் பஞ்சமில்லை, இதை விரும்புவோரின் பற்றாக்குறையும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவையான உணவு ஆரோக்கியத்திற்கு எதிரி


ஆனால் நாவுக்கு இனிமையான சுவையான உணவு, நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எதிரியாக மாறிவிடுகிறது. உணவு உண்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்துக் கொண்டால்,அ து மெல்ல மெல்ல நம் உடல் பருமனை அதிகரித்து விடச் செய்கிறது. அதிகமாகும் எடை, நமது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பாக படிந்துவிடுகிறது.


அதிக உணவு கொழுப்பாக படியும்


உடலில் படிந்த கொழுப்பைக் குறைப்பது மலையை, கயிறு கட்டி இழுப்பது போன்ற மிகப் பெரிய வேலையாக பலரும் நினைக்கிறார்கள். சிலர் உடல் எடையை குறைக்க உணவு மற்றும் பானங்களை அதிகம் குறைத்துக்கொள்வார்கள், ஆனால் இதன் காரணமாக உடலில் பலவீனம் வர ஆரம்பிக்கிறது.


மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையால் தொல்லையா? பிஸ்தா சாப்பிடுங்க, உடனே பலன் தெரியும்!!


காலை உணவு மூலம் உடல் பருமன் குறைப்பு


அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவைக் குறைப்பதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். காலை உணவில் சில ஸ்பெஷல் பொருட்களை சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.


காலை உணவில் இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறையும்


காலை உணவில் ஓட்ஸ்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ்,  எடை அதிகரிப்பதைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஓட்ஸை  தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. இதனால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது என்பதோடு, எடையும் சீராக இருக்கும்.


மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!


தானிய மாவு ரொட்டி 
காலையில் இட்லி தோசை என அரிசி மற்றும் கோதுமை உணவுகளை சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த பழக்கத்தை உடனடியாக மாற்றவும், ஏனெனில் சிறந்த பல தானிய மாவு பொருட்கள் உள்ளன. பல தானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு அதில் இருந்து காலை உணவை தயாரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.


இது, எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும், பல்வேறு விதமான தானிய உணவுகள் காலை உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.


பழங்கள்
எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குவதற்குக் மற்றுமொரு வழி காலை உணவில் பழங்களை உண்பது.  நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் என்பதில், நார்ச்சத்துக்களுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்கள், உடல் எடையை பராமரிப்பதில் மிகவும் சிறந்தவை ஆகும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சோயா பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ