Weight Loss Tips: தொப்பையால் தொல்லையா? பிஸ்தா சாப்பிடுங்க, உடனே பலன் தெரியும்!!

Pista For Weight Loss: தொப்பையை குறைக்க வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது நமக்கு நல்லதாக இருக்கும். அதில் ஒன்று பிஸ்தா மூலம் தொப்பையை குறைப்பது. பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிடுவது தொப்பையை குறைக்கவும், எடையை குறைக்கவும் உதவும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2023, 05:17 PM IST
  • பிஸ்தாவில் அதிக நார்ச்சத்து உள்ளது.
  • பிஸ்தாவில் தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மிக அதிகமாக உள்ளது.
  • இது நமது உடலின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Weight Loss Tips: தொப்பையால் தொல்லையா? பிஸ்தா சாப்பிடுங்க, உடனே பலன் தெரியும்!! title=

தொப்பையை குறைக்க பிஸ்தா: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. தொப்பையை குறைக்க வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது நமக்கு நல்லதாக இருக்கும். இதனால், எந்த விதமான பக்கவிளைவுகளிலும் நாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அதில் ஒன்று பிஸ்தா மூலம் தொப்பையை குறைப்பது. பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிடுவது தொப்பையை குறைக்கவும், எடையை குறைக்கவும் உதவும். ஒரு கைப்பிடி (சுமார் 30 கிராம்) பிஸ்தாவில் 5 கிராம் புரதம், 13 கிராம் கொழுப்பு மற்றும் 163 கலோரி உள்ளன. அமெரிக்க வேளாண்மைத் துறையின் உணவுத் தரவு மையம் நடத்திய ஆய்வில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் படி, பிஸ்தாவில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் இருந்தாலும், அது எடையைக் குறைக்க உதவும் என்றால், பாப்கார்ன் போன்ற தின்பண்டங்களும் எடையைக் குறைக்குமா என்ற கெள்வி நம் மனதில் வரக்கூடும். ஆனால் அது உண்மையல்ல. பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளன. ஆனால் இவை நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கலோரிகள் ஆகும். மேலும் அவை பாப்கார்னில் உள்ள கலோரிகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை. தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வில், பிஸ்தாவில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, கலோரிகளுடன், பிஸ்தாவில் புரதம் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

பிஸ்தா உடல் எடையை குறைக்க உதவும்

பிஸ்தா எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், தொப்பையைக் குறைக்கவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் இரண்டு குழுக்களில் ஒரு பரிசோதனையை நடத்தினர். அதில் ஒரு குழுவுக்கு பிஸ்தா உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டது. மற்ற குழுவுக்கு பிஸ்தா வழங்கப்படவில்லை. பிஸ்தா அளிக்கப்பட்ட குழுவிற்கு, மற்ற குழுவைக்காட்டிலும் அதிக கொழுப்பு குறைந்திருந்தது. இதுமட்டுமின்றி பிஸ்தாவை உட்கொண்டவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைத்து அடிபோனெக்டின் அளவு அதிகரித்திருந்தது. 

பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் மற்ற நன்மைகள்

- பிஸ்தாவில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. குடல் மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இந்த நார்ச்சத்துகளில் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.

- பிஸ்தாவில் தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. இது நமது உடலின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

- பிஸ்தாவில் பொட்டாசியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.

- பிஸ்தா இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சோயா பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News