உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

Weight Loss & Rice Based Foods: அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளதால், இதனை உட்கொள்ளும் போது, கலோரிகளின் அளவு அதிகரிக்கும் என்றும், எனவே உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை  தவிர்க்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறுவதைக் கேட்கலாம்.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2023, 04:39 PM IST
  • அரிசி உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகின்றது.
  • உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல சத்துக்கள் உதவுகின்றன.
  • அரிசி என்பது நாம் பயன்படுத்தும் அடிப்படை தானியங்களில் ஒன்று.
உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன! title=

அரிசி என்பது நாம் பயன்படுத்தும் அடிப்படை தானியங்களில் ஒன்று. விதம் விதமாக வேற்று நாட்டு உணவுகளை சாப்பிட்டாலும், ஒருவேளையாவது அரிசி உணவு சாப்பிட்டால் மட்டுமே மனது திருப்தி அடையும் என்றால் மிகையில்லை. உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை  தவிர்க்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறுவதைக் கேட்கலாம். ஆனால், அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளது. இதனால் இதனை சாப்பிடுவதால், உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து, உட்கொள்ளும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும் என்றும், எனவே, அரிசி உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது சரியல்ல.  

தென்னிந்திய உணவுகளின் அடிப்படை உணவான அரிசி உணவுகள் சுவையானது என்பதோடு, அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. பல விதமான நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல சத்துக்கள் உதவுகின்றன என்பதோடு எடை இழப்பிற்கும் உதவுகிறது என அம்பானி குடும்பம் உட்பட பல பிரபலங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணராக மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வரும் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்.

உணவு பழக்கங்கள் 

நம்முடைய உணவு பழக்கங்கள் எல்லாமே நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தான் அமைந்துள்ளன. எந்த வகையான பயிர்களை நாம் சாகுபடி செய்கிறோமோ அந்த பயிர்களை கொண்டு பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் அறுவடையை நாம் பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

பிரோபயாட்டிக் தானிய உணவு

அரிசி ஒரு பிரோபயாட்டிக் தானிய உணவு. அரிசி உணவுகள் செரிமானத்திற்கு வலுசேர்ப்பதோடு, வயிற்று பிரச்சனைகள் நம்மை வாட்டும் போது சாப்பிட சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதிலும் இட்லி வேக வைத்த உணவு என்பதால்,  உடல் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் போது எடுத்துக் கொள்ளும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியம் பாதிக்கபப்ட்டிருக்கும் போது ஜீரண சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அரிசி உணவுகள் எளிதில் ஜீரணமாகும் என்பதால், அதை விட பாதுக்காப்பான உணவு எதுவும் இல்லை.  

மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

 பருப்புடன் சேரும் போது பலன் பன்மடங்காகிறது

 அரிசியை எல்லா விதமான  பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும். பருப்பு காய்கறிகள், ஆரோக்கியமான மசாலாக்கள் அடங்கிய சாம்பாருடன் உட்கொள்ளும் போது பலன் பன்மடங்காகிறது.

( பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News