Exercise to reduce belly: நம்மில் பலருக்கு வயிற்றுப் பகுதியிலும், இடுப்புப் பகுதியிலும் இருக்கும் கொழுப்பு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடலில் உள்ள பெரும்பாலான கொழுப்பு வயிற்றைச் சுற்றிக் குவிந்து, அதன் காரணமாக இடுப்பின் இருபுறமும் கொழுப்பு அடுக்காகத் தெளிவாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பையை (Belly Fat) குறைக்க 2 சிறந்த உடற்பயிற்சிகள் உள்ளன. இவை உங்கள் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பை வேகமாக குறைக்க உதவுகின்றன. இவற்றை செய்வதன் மூலம் இடுப்பின் இருபுறமும் படிந்திருக்கும் கொழுப்பு நீங்கி மெல்லிய இடுப்பு உருவாகும். தொப்பையை குறைக்கும் பயிற்சிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்: பர்பீஸ்


பர்பி உடற்பயிற்சி (Burpee Exercise) முழு உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது கார்டியோ பயிற்சியாகும். தொப்பை கொழுப்புடன், இது கைகள், இடுப்பு, மார்பு, குளுட்ஸ் மற்றும் கால்களின் தசைகளையும் பலப்படுத்துகிறது.


1. பர்பி உடற்பயிற்சி செய்ய, ஸ்கேட் பொசிஷனில் தொடங்கவும். இதில், உங்கள் முழங்கால்கள் சற்று வளைந்து, இடுப்பு நேராகவும், கால்கள் தோள்பட்டை போல் அகலமாகவும் இருக்கும்.
2. இப்போது உங்கள் உள்ளங்கைகள் இரண்டையும் பாதங்களின் உள்பகுதியில் இருக்கும் வகையில் தரையில் படும்படி வைக்கவும்.
3. உள்ளங்கையில் எடையை போட்டு, பாதங்களை பின்னோக்கி உதைத்து புஷ்அப் நிலைக்கு வரவும்.
4. இடுப்பு வளைந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. இப்போது புஷ்அப் செய்து, விரைவாக தவளை நிலைக்கு வந்து, இரு கைகளையும் உயர்த்தி உயரத்தில் குதிக்க முயற்சிக்கவும்.
6. அதன் பிறகு, தொடக்க நிலைக்கு வந்து, அதே செயல்முறையை மீண்டும் செய்யவும்.


ALSO READ | முள்ளங்கி இலை ஜூஸ்சில் மகத்தான பயன்கள்


தொப்பையை குறைக்க உடற்பயிற்சி: மவுண்டன் கிளைம்பர் 
மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி (Exercise) மைய தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகிறது.


1. மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி செய்ய, புஷ்அப் நிலைக்குச் செல்லவும்.
2. இப்போது வயிற்றைக் குறைக்க, மைய தசைகளை இறுக்கி, இடுப்பை நேராக வைக்கவும்.
3. இதற்குப் பிறகு, வலது முழங்காலை முடிந்தவரை மார்புக்கு அருகில் கொண்டு வாருங்கள்.
4. இப்போது வலது முழங்காலை பின்னால் எடுத்துச்சென்று, ​​இடது முழங்காலை மார்பை நோக்கி கொண்டு வரவும்.
5. இதேபோல், வேகமாக சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைக்க முயற்சி செய்யுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இவை கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன.)


ALSO READ | Dry Ginger Benefits: உலர் இஞ்சி பொடியின் ஆரோக்கிய நன்மைகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR