குறைந்த HDL கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: பெரும்பாலும் நாம் சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைக் காண்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலுக்கு எப்போதும் தீங்கு ஏற்படாது, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தான் ஏற்படுகிறது. நம் இரத்தத்தில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது, ஒன்று HDL அதாவது நல்ல கொலஸ்ட்ரால், மற்றொன்று LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் உள்ள மெழுகு போன்ற ஒரு பொருளாகும். இது இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து உடல் முழுவதும் இரத்தத்தை சுற்ற உதவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் கொலஸ்ட்ராலில் உள்ள நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்களின் அளவு அதிகமாகும்போது, ​​​​அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் மட்டுமில்லாமல், நல்ல கொலஸ்ட்ரால் சாதாரண அளவை விட குறைவாக இருப்பதும் பல உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஆனால் ஒருவரது உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதாவது எச்டிஎல் அளவு வெகுவாகக் குறைந்திருந்தால், அதைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு அடிகக்டி குழப்பம் ஏற்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


HDL கொலஸ்ட்ரால் குறைவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை முதலில் புரிந்து கொள்வோம்?


இரத்தத்தில் HDL அளவுகள் குறைந்தால் நிலைமை மோசமாக்கலாம். மேலும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி, இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் ஆபத்தும் அதிகரிக்கும். ஆகையால், உடலில் கொலஸ்ட்ராலின் சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியம். HDL என்பது "நல்ல" கொலஸ்ட்ரால் என்று கருதப்படுகிறது. இரத்தத்தில் அதன் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 40 மி.கிக்கு அதிகமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் கடுக்காய்... எடுத்துக் கொள்ளும் சரியான முறை!


இரத்தத்தில் நல்ல கொழுப்பு (HDL) குறைந்தால் காணப்படும் அறிகுறிகள் (Low HDL Cholesterol Symptoms)


எச்டிஎல் கொழுப்பு குறைந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை கச்சிதமாக கூற முடியாது. ஆனால் இரத்தத்தில் அதன் அளவு அதிகமாகக் குறையும் போது அது இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் பின்வரும் அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 


- பக்கவாதம்
- மாரடைப்பு
- கரோனரி தமனி நோய்
- பெரிஃபெரல் பாலிநியூரோபதி
- கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம்


மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வரை சிலருக்கு குறைந்த அளவு எல்டிஎல் பற்றி தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அவ்வப்போது இதற்கான பரிசோதனையை செய்துகொள்வது நல்லது.  கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் குறைந்த கொழுப்புள்ள உணவுகளைச் சேர்ப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி அல்லது ஓடுதல், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Dark Tea: டீ குடிச்சுகிட்டே நீரிழிவை குறைக்கலாம்! பால் டீ வேண்டாம்! க்ரீன் டீ? NO


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ