ஒல்லியாக இருப்போர் உடல் எடையை ஏற்றுவதற்கும் புரதச்சத்தை அதிகரிப்பதற்கும் வாழைப்பழத்தினை எடுத்துக்கொள்வதுண்டு. உடல் பலவீனத்துடன் இருப்பவர்கல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் வாழைப்பழத்தினை சாப்பிடுவர். பசியை தணிக்க, பயணத்தின் போது அளவாக சாப்பிட என வாழைப்பழம்  பல வகைகளில் பல வகை உணவாக பயன்படுகிறது. இது, பல தரப்பினருக்கும் ஏற்ற அற்புதமான பழமாகும். இங்கு வாழைப்பழத்தினால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைப்பழத்தினால் ஏற்படும் நன்மைகள்:


1.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம்:


வாழைப்பழங்களில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் டயட்டரி ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதன் காரணமாக நம் உடலில் செரிமானம் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது வாழைப்பழம். 


2.ஆற்றலை அதிகரிக்க உதவும் பழம்:


வாழைப்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன. இவை, உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக வழங்குகிறது. ஒரு நாளில் பல மணி நேரம் உழைப்பதற்கு தேவையான அற்றலையும் வழங்குகிறது. மாலை அல்லது மதிய நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் வாழைப்பழத்தை சாப்பிடலாம். 


,மேலும் படிக்க | இரவு தூங்கும் முன் பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?


3.செரிமானத்திற்கு உதவும்:


மேற்கூறியதை போல வாழைப்பழங்கள் உடலில் நல்ல செரிமானத்திற்கு உதவும். இதில், பெக்டின் என்ற ட்யட்டரி ஃபைபர் உள்ளது. இது, வழக்கமான குடம் இயக்கம் ஒழுங்காக இயங்குவதற்கு உதவும். வாழைப்பழம் சாப்பிடுபவர்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதாக சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது, வாழைப்பழம். 


4.இதயத்திற்கு நல்லது:


வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்பட்கிறது. வாழைப்பழம் எடுத்துக்கொள்பவர்கள் அதிக ரத்த அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதயம் தொடர்புடைய பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் உதவுகிறதாம். மேலும் பக்கவாதம் தொடர்பான நோய் பாதிப்புகளையும் வாழைப்பழம் கணிசமாக குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 


5.சருமத்திற்கு நல்லது:


வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் இருக்கின்றன. இது, சருமத்தை மேன்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சரும சுருக்கங்கள், வாழைப்பழம் சாப்பிடுவதால் சருமத்தில் விழும் கோடுகள், சருமத்தில் வயதான தோற்றம் போன்ற பலவகையான பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். 


6.இயற்கை ஸ்வீட்:


நம்மில் பலர் இனிப்பு பிரியர்களாக இருப்போம். ஆனால், உடல் எடை அதிகரித்து விடுமோ, உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ போன்ற பயத்தினால் இனிப்பு பண்டங்களை தவிர்ப்போம். இதற்கு மாற்றாக வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளலாம். டயட்டிற்காக எடுத்துக்கொள்ளும் ஸ்மூத்தீஸ் வகை உணவுகள், ஓட்மீல் வகை உணவுகள் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் சர்க்கரை கலப்பதற்கு பதில் வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது இனிப்பு சுவையை தரும். 


7.மனநலனிற்கும் நல்லது:


வாழைப்பழத்தில் பி6 வகை வைட்டமின் உள்ளது. இந்த வகை வைட்டமின் மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். இது, மன அழுத்தத்தை குறைத்து செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மூளை சம்பந்தப்பட்ட ஹார்மோனகளை தூண்டிவிடும். இதனால், மனநலனில் மேன்மை ஏற்படும் என்று சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | பயங்கர புத்திசாலியா மாறணுமா? இந்த உணவுகள் உங்கள் மூளையை மேம்படுத்தும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ