ஆண் மலட்டுத்தன்மை நீங்க சிகிச்சை: திருமணமான ஒவ்வொரு ஆண்மகனும் தான் ஒரு தந்தையாக வேண்டும் என விரும்புகிறார். எனினும் இந்த ஆசை அனைவருக்கும் எளிதாக நிறைவேறுவதுல்லை. உங்கள் உணவு முறை சரியில்லாமல் இருந்தால் அல்லது நீங்கள் தவறான உணவுகளை உட்கொண்டால், உங்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். மாறிவரும் வாழ்க்கை முறையும் நம் உணவை பாதிக்கிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவது மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஆகையால் ஆண்கள் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வது முக்கியமாகும். ஆண்கள் எந்தெந்த பொருட்களை உட்கொண்டால், மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


இனிப்புப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்: 


குழந்தையின்மை பிரச்சனையைத் தவிர்க்க, அதிகமாக இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை சாப்பிடுவதால் உடல் எடை கூடும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் உயர்கிறது. இது விந்தணுக்களின் தரத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இனிப்புகளுடன் பேஸ்ட்ரி, கேக், சாக்லேட் பிஸ்கட், செயற்கை இனிப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | Male Fertility: விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அளவை அதிகரிக்கும் உணவுகள் 


துரித உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளில் இருந்து விலகி இருங்கள்: அதிக சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்


சோடியம் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்வதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். பர்கர், பீட்சா அல்லது டிரான்ஸ் கொழுப்பைக் கொண்ட பொருட்கள் ஆகியவற்றிலும் சோடியம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கலாம். எனவே இதுபோன்ற பொருட்களை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்கவும். மறுபுறம், நீங்கள் அதிக உப்பு சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்கும். இது குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


புகைபிடிப்பதும் தீங்கு விளைவிக்கும்: 


புகைபிடித்தல் விந்தணுக்களின் தரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது, புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான வழிகளை பின்பற்ற வேண்டும். இது தவிர, நீங்கள் புகையிலை குட்கா போன்றவற்றையும் உட்கொள்ளக்கூடாது. இது குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


மது அருந்துவதும் தீங்கு விளைவிக்கும்: 


கூடுதலாக, அதிகப்படியான குடிப்பழக்கம் விந்தணுக்களின் இயக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், விந்தணுவின் அளவு மற்றும் கட்டமைப்பையும் பாதிக்கிறது. அதிகமாக மது அருந்துவது விந்தணுக்களின் தரத்தை பாதிக்கிறது. ஆண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவையும் இது குறைக்கிறது.


மேலும் படிக்க | மழைகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் 4 பழங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ