கருத்தரிப்பு தாமதத்துக்கான 5 முக்கிய காரணங்கள்

கருத்தரிப்பு தாமதத்துக்கு 5 முக்கிய காரணங்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 18, 2022, 04:30 AM IST
  • கருத்தரிப்பு இயலாமைக்கான காரணங்கள்
  • மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்
  • நீண்ட கால பிரச்சனை என்றால் மருத்துவரை அணுகுங்கள்
கருத்தரிப்பு தாமதத்துக்கான 5 முக்கிய காரணங்கள் title=

ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் ஆயிரகணக்கான தம்பதிகன் மனவலியுடன் மருத்துவமனை வாசலை ஏறி இறங்கி வருகின்றனர். சிலருக்கு திருமணமான ஒரு சில மாதங்களிலேயே கிடைக்கும் குழந்தை வரம், சிலருக்கு வருடங்களானாலும் கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தால், விரைவாக தாய்மையை அடையலாம். குழந்தை பேறுக்கு இடையூறாக இருக்கும் 5 முக்கியமான விஷயங்களை இங்கே பார்ப்போம். 

மன அழுத்தம்

கடுமையான மன அழுத்தம் பல உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் கருவுறுதலையும் பாதிக்கும். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, உங்கள் உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க வேண்டும். கடுமையான மன அழுத்தத்தைக் கையாளும் போது நீங்கள் கர்ப்பமாகிவிட்டாலும், அது உங்களுடன் சேர்ந்து குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

மேலும் படிக்க | Health Alert: தாம்பத்திய வாழ்க்கையை குலைக்கும் சில நோய்கள்

தூக்கமின்மை

தூக்கம் மிகமிக அவசியமான ஒன்று. இரவு தூக்கத்தை தவிர்க்கவே கூடாது. இரவு தூங்கும்போது உடல் புத்துணர்ச்சி பெறுவது மட்டுமில்லாமல் மன அமைதியும் பெருகும். ஒழுங்கற்ற தூக்க முறை பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், தூக்கமின்மை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் குறைத்து, தொற்று ஆபத்துகளை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு, தூக்கமின்மை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். பெண்களுக்கு, சீரற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். 

அதிக எடை

அதிக எடை மற்றும் பருமனான பெண்களுக்கு கருத்தரிப்பது மற்றவர்களை விட சற்று கடினமானதாக இருக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது முறையற்ற அண்டவிடுப்பின் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறைந்த உடல் எடை கூட ஒரு சிலருக்கு கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

ஹார்மோன் பிரச்சனை, அதிக எடை அல்லது மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் ஒருவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கலாம். ஒரு நிலையான மாதவிடாய் சுழற்சி இல்லாததால், அண்டவிடுப்பின் காலத்தைக் கணக்கிடுவது கடினமாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக கர்ப்பமாக முயற்சி செய்தும், பலனளிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகவும். அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க | உடலுறவுக்குப் பிறகு உடனடியாக சிறுநீர் கழிப்பது எவ்வளவு முக்கியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News