இன்றைய மாடன் காலத்தில் நிறைய பேர் தரையில் விரிப்பதற்கு பிளாஸ்டிக் பாய், கம்பளி என்று உபயோகிக்கின்றோம். ஆனால் இயற்கை முறையில் இருக்கும் பாய்களை மறந்து விட்டோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாயின் வகைகள்:- கோரைப் பாய், பிரம்பு பாய், இச்சம் பாய், முங்கில் பாய், தாழம் பாய், பேரிச்சம் பாய், நாணல் கோரை பாய் என பலவகை உள்ளன.


இயற்கை முறையில் செய்யபடும் பாயில் படுப்பாதனால் ஏற்படும் நன்மைகள்:- 


# பொதுவாக பாய் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"


# பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]


# கர்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]


# மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,


# பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது, [பாயில் தலையணி இல்லாமல் உறங்குவதே சிறந்தது,]


# ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,


# பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,


பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசையோ கிடையாது, ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,


கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
உடல் உஷ்ணம், வதையும், தவிரத்து விடும். உடலின் வளர்ச்சியும், ஞாபக சக்தியும், மன அமைதியும், நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது,