புரத உணவுகளின் சிறந்த மூலமாக இறைச்சி, மீன் மற்றும் முட்டைகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், அவர்கள் அசைவ உணவை விரும்புவதுமில்லை. அத்தகைய சூழ்நிலையில், சைவ உணவு உண்பவர்கள் புரதத்தின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலமும் புரதசத்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறத்த புரத மூலங்களை கொண்ட காய்கறி உணவுகள்


1. காலிஃபிளவர்


காலிஃபிளவரை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. அத்துடன் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அதில் மிக அதிகமாக உள்ளது. இதனை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் புரதத்தின் தேவை பூர்த்தியாகும்.


மேலும் படிக்க | மைக்ரேன் தலைவலி பாடாய் படுத்துதா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்!!


2. கீரை


கீரை பச்சை இலை காய்கறிகளில் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. இதில் புரதம் மட்டுமின்றி, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. எனவே, கீரையை தவறாமல் உட்கொள்ளுங்கள்.


3. உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதன் மூலமும் புரதத்தைப் பெறலாம். அதற்காக நீங்கள் வித்தியாசமாக சமைக்க வேண்டும். அதாவது, நறுக்கிய உருளைக்கிழங்கை குறைந்த தீயில் வறுத்து சாப்பிட்டாலே போதும். இதிலிருந்து புரதம் மட்டுமின்றி நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும்.


4. ப்ரோக்கோலி


நீங்கள் இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் ப்ரோக்கோலி சாப்பிட ஆரம்பிக்கலாம். இது ஆரோக்கியமான காய்கறி. இதில் புரதம் மட்டுமின்றி இரும்புச்சத்தும் கிடைக்கும். இதை வேகவைத்து அல்லது சாலட் செய்து சாப்பிடுவது கூடுதல் நன்மை. 


5. காளான்கள்


காளான் புரதத்தின் வளமான ஆதாரமாக கருதப்படுகிறது. வாரத்திற்கு 3 முதல் 4 முறை சாப்பிட்டு வந்தால், உடலில் புரதம் உள்ளிட்ட பல சத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் மாதுளை: இன்னும் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்


மேலும் படிக்க | அட... உடல் எடையை குறைக்க கொண்டைக்கடலையா? அதிசயவைக்கும் நன்மைகள்!!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ