மனம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்: உடல் ஆரோக்கியத்துடன், ஒரு நபருக்கு மன உறுதியும், சுறுசுறுப்பான மூளையும் மிகவும் முக்கியம். வேலை அழுத்தம் அதிகரிப்பதால், பல பிரச்சனைகளில் சிக்கி மனதையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. உங்கள் ஒட்டுமொத்த உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, நீங்கள் சத்தான உணவு, போதுமான தூக்கம் மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மனதுக்கும் உடலுக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. எனவே, உடலுடன் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இது உங்கள் மனதையும் மூளையையும் கூர்மையாக்கும் சில பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. தியானம் அல்லது யோகா (Yoga and Meditation for Brain Health)


உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். மனதை சரியாக ஒருமுகப்படுத்த, தியானம் செய்வதே பயனுள்ள பயிற்சி. இதற்காக, நீங்கள் அதிகாலையில் எழுந்து யோகா (Benefits of Yogasana) அல்லது தியானத்தை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தியானம் செய்வதன் மூலம், சில நாட்களில் உங்கள் மனதில் நிம்மதி ஏற்படும். இது உங்களை மன உறுதியுடன் வைத்திருக்கும்.


2. மூளைக்கான விளையாட்டுக்கள் (Games that Increases Brain Power)


மனதளவில் ஆரோக்கியமாக இருக்க ஒரு வழி மூளை பயிற்சிகளை செய்வது மிகுந்த பலன் கொடுக்கும் . ஆம், நீங்கள் உங்கள் மனதைக் கூர்மைப்படுத்த விரும்பினால், செஸ், சுடோகு போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த விளையாட்டுகள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்குகிறது. இந்த விளையாட்டுகளை விளையாடுவதற்கு நாள் முழுவதும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஆரோக்கியமான மனம் பல நோய்களில் இருந்து உங்களை காக்கும்.


மேலும் படிக்க | ஒரே வாரத்தில் உடல் எடை குறைய... சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க போதும்
 
3. நடனம் அல்லது இசை (Dance and Music for Healthy Brain)


உங்கள் மனதை கூர்மைப்படுத்த விரும்பினால், இதற்கு நடனம் அல்லது இசையின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். நடனம் போன்ற உடல் செயல்பாடுகள் உங்களை மனதளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது உங்கள் மனதை வருத்தமடையச் செய்யாது, உள்ளிருந்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நடனம் மற்றும் இசை ஒரு நபரை பதற்றம் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுவிக்கிறது. நடனம் உங்கள் உடலில் இருந்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது.


பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தகவல்களை வழக்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எந்த தகவல்களை படித்தாலும், அதை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.


மேலும் படிக்க | Pirola: உலகையே அதிர வைக்கும் புதிய கொரோனா வைரஸ்! இந்த அறிகுறிகள் இருக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ