Benefits Of Dates For Men: பேரீச்சம்பழம் உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. மூளை வளர்ச்சிக்கும், நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும், செரிமான சக்தியை அதிகரிப்பதற்கும் உதவும் இந்தப் பழத்தை தினமும் காலை மாலை குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம்பழத்தில் கலோரிகள், நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை நிறைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, இரும்பு மற்றும் வைட்டமின்களும் இதில் காணப்படுகின்றன. இத்தகைய ஊட்டசத்துகளைக் கொண்டிருக்கும் பேரீட்சை பழத்தை உட்கொள்வதால் ஆண்களுக்கு உடல் வலிமையும் கூடுகிறது. மேலும், பலவீனம் நீங்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பெரிய அளவில் உதவுகிறது.


செரிமான மண்டலம்


ஆண்கள் பேரீச்சம்பழம் உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பு பிரச்சனைகளை சமாளிக்க முடியும். இதனை உட்கொள்வதால் வயிற்றில் மலச்சிக்கல் ஏற்படாது. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது இதற்கு முக்கிய காரணம். 


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்ய வெண்டும்? இதோ தீர்வு


மூளை ஆற்றல் அதிகரிக்கும்


பேரிச்சம்பழம் சாப்பிடுவது உங்கள் மூளை ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். வைட்டமின் பி மற்றும் கோலின் ஆகியவை பேரீச்சம்பழத்தில் காணப்படுகின்றன, அவை நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகின்றன.


விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது


ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க பேரீச்சம்பழம் உதவுகிறது. இதில் எஸ்ட்ராடியோல் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. எனவே, ஆண்கள் கண்டிப்பாக பேரீச்சம்பழத்தை உட்கொள்ள வேண்டும்.


எலும்புகளை வலுவாக்கும்


பேரிச்சம்பழத்தில் சில முக்கியமான தாதுக்கள் காணப்படுகின்றன. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை அனைத்தும் எலும்பு பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதால், ஆண்களின் எலும்பு வளர்ச்சியுடன், வலிமையும் பெறுகிறது.


மேலும் படிக்க | இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR