இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பழவகைகள்: மாறிவரும் வாழ்க்கை முறையில் சர்க்கரை நோய் பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது என பல காரணங்களால் மக்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், இந்த மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிரச்சனை தீவிரமடைவதற்கு முன், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் பின்னர் பிரச்சனை அதிகரிக்கக்கூடும். பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை அளிக்கின்றன. ஆகையால், சர்க்கரை நோயாளிகள், தங்கள் வலிமையை அதிகரிக்க எந்தெந்த பழங்களை உட்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலில் வலிமை வியப்பளிக்கும் வகையில் அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும்பாலான நிபுணர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரஞ்சு சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயால் பல வித பிரச்சனைகளால் பாதிக்கப்படும் உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு நல்ல மாற்றாகவும், ஊட்டச்சத்து ஊக்கியாகவும் இது உதவும்.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
திராட்சை மூலம் வலிமை பெறலாம்
இது கோடைக்காலம். இப்போது சுவையான திராட்சைப்பழங்கள் சந்தையில் கிடைக்கும். இந்த பழத்தை சாப்பிடுவதால் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். இதை உண்பதால் உடலுக்கு பலம் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். திராட்சைப்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிப்பதாக நம்பப்படுகின்றது.
கொய்யாவும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்
மனித உடலுக்கு கொய்யாவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இந்த பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லதாகும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். இது உங்களுக்கு உதவுவதோடு உங்கள் உடலும் வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ