Sperm Count: ஆண்களுக்கான எச்சரிக்கை... விந்தணுவை குறைக்கும் இந்த உணவுகள் வேண்டாமே...
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விந்தணு குறையாமல் இருக்க ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும் பிரச்சனை தொடர்ந்து கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால் சில உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, தந்தையாகவேண்டும் என கனவு பொய்த்து போகும்.
ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாட்டை ஏற்படுத்தும் உணவுகள்
பீட்சா, இனிப்புகள், சோடா மற்றும் ரெட் மீட் போன்ற மேற்கத்திய உணவுகளை அதிகம் உட்கொள்ளும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை, சாதாரண உணவு உண்பவர்களை விட குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மறுபுறம், மேற்கத்திய உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கருவுறுதலை அதிகரிக்கும் இனப்பெருக்க ஹார்மோன்களும் குறைகின்றன.
எனவே, ஆண்கள் தங்கள் உணவில் இருந்து மேற்கத்திய உணவுகளை விலக்ககி வைக்க வேண்டும். எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், வழக்கமாக எடுத்துக் கொள்வது மிகவும் பாதிப்பை உண்டாக்கும். இது தவிர, அதிக மது மற்றும் சிகரெட் உட்கொள்ளும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறது.
அதே போன்று பலா உணவுகளை அதிகம் உகொள்வது ஆபத்து. பால் முழு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அதில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. சுகாதார நிபுணர்களும் இதை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர், ஆனால் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவதால், ஆண்களின் விந்தணுவின் தரம் மோசமடையக்கூடும். சில நேரங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க, விலங்குகளுக்கு ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுகின்றன. இது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, எனவே குறைந்த அளவு கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | Sperm Donation: விந்தணு தானம் குறித்து ‘அறியாத’ தகவல்கள்..!!!
ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விரும்பினால், உங்கள் உணவில் கடல் உணவுகள், கோழி, பருப்புகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த அனைத்து பொருட்களிலும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே, அவற்றை உட்கொள்வதால் உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மீன், கோழிக்கறி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை சராசரியாக 43 மில்லியனாக இருக்கும். இது மிகவும் நல்ல அளவாக கருதப்படுகிறது. அதே சமயம், மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR