ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்கும் இந்தக் காலத்தில் பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கே ஆண்களுக்கு (Mens Health benefits) ஆரோக்கியம் ஊட்டும் 5 மசாலாப் பொருள்கள் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாகவும், எளிதில் நோய் தாக்காதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


ஆண்களின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள மசாலா (Spices beneficial for men's health)
சிலாஜித்: உலக புகழ்பெற்ற இயற்கை மூலப்பொருட்களில் ஒன்று  சிலாஜித் ஆண்ட்ரோலோஜியா இதழ் ஒரு ஆய்வை நடத்தியது, அதன் படி ஆண் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க சிலாஜித் உதவுகிறது. இந்த மூலிகை விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது. 


பூண்டு: பூண்டு ஆண்களில் ஆற்றலை அதிகரிக்கும் ஒரு அற்புதமான பொருளாகும். இது ஆரோக்கியமான இருதய அமைப்புக்கு இன்றியமையாத பெரிய அளவில் வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் அல்லிசின் பாலியல் உறுப்புகளுக்கு மேம்பட்ட இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் விந்தணுக்களையும் பாதுகாக்கிறது. செலினியம் விந்தணு இயக்கத்தை மேம்படுத்தும் இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும்.


கிராம்பு: விந்து முந்துதல், விந்தணு நீர்த்துப்போதல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஒரு கிராம்பை வாயில் ஒதுக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் கிராம்பு எண்ணெய்யை ஆணுறுப்பு, விதைப் பை மீது தடவி மசாஜ் செய்து வந்தால் இந்த பிரச்னை நீங்கும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அஸ்வகந்தா: அஸ்வகந்தா ஆண்மை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அது மட்டுமில்லாமல் ஆண்களின் விந்தணுக்கள் அளவையும் அதிகரிக்கிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.


ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR