மைக்ரேன் தலைவலி பாடாய் படுத்துதா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்!!
Migraine:மைக்ரேன் தலைவலிக்கு சிகிச்சையாக மருந்துகள் அவசியம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வதும் மிக அவசியமாகும்.
மைக்ரேன் தலைவலி நிவாரணம்: வாழ்க்கையில் மன அழுத்தம் காரணமாக, பலர் அவ்வப்போது தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த தலைவலி சில சமயம் கொடூரமான ஒற்றைத் தலைவலி அதாவது தீவிர மைக்ரேன் தலைவலியாக மாறுகிறது. இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. மேலும், மன அழுத்தம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் தூண்டுதல்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இன்னும் பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி அதிகரிக்கிறது.
மைக்ரேன் தலைவலிக்கு சிகிச்சையாக மருந்துகள் அவசியம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வதும் மிக அவசியமாகும். இவை இரண்டும், தீவிர நிலைமையைக் குறைக்க உதவுவதோடு, நீண்ட காலத்திற்கு ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்தவும் உதவும். வெண்ணெய், விதைகள் மற்றும் கொட்டைகள், தண்ணீர், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பல மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற சில உணவுகள் ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவும். நீங்களும் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தண்ணீர் மற்றும் பழச்சாறு
நீரிழப்பு என்பது ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான தூண்டுதலாகும். ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர், எலுமிச்சை நீர், இஞ்சி டீ அல்லது நெல்லிக்காய் அல்லது கற்றாழை போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மெக்னீசியம் போன்றவை நல்ல மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு செயல்பாட்டை பராமரிக்க முக்கியமாகும். இவை ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த ஓய்வு அளிக்கும் உணவுகளில் சிலவாகும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவை மூளை மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
விதைகள் மற்றும் கொட்டைகள்
விதைகள் மற்றும் பாதாம் போன்ற பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்கவும் நரம்புகளை தளர்வாக்கவும் உதவுகின்றன. ஒற்றைத் தலைவலி நோயாளிகள் விதைகள் மற்றும் கொட்டைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ரசாயனம் இல்லாமல் பச்சைப் பப்பாளியை பழுக்க வைப்பது எப்படி? சூப்பரான டிப்ஸ்
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது. இது ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இவை ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்கும் இரண்டு முக்கிய அம்சங்களாகும். அடிக்கடி தலைவலி வருபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், டார்க் சாக்லேட் மிகவும் உதவியாக இருக்கும்.
கொழுப்பு மீன்
சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன. அவை ஒற்றைத் தலைவலியின் தீவிரத்தை குறைக்க உதவுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சில நபர்களுக்கு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. ஒற்றைத் தலைவலிக்கு ஒரே மாதிரியான சிகிச்சை எதுவும் இல்லை என்பதை அறிவது முக்கியம். எந்தவொரு புதிய உணவை உட்கொள்ளத் தொடங்கும் முன்னரும் மருத்துவரை அணுகுவதும் அவசியம்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 30 வயது ஆகிவிட்டதா? இதயத்திற்கு இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ