நம்மில் பலருக்கு உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு என்னதான் டயட் இருந்தாலும் உடற்பயிற்சி செய்தாலும் குறையவே குறையாது. இதனால் நமது உடல் எடையும் குறையாமல் இருக்கும். இதை தவிர்க்க சில வழிமுறைகள் இருக்கிறது. இவற்றை பின்பற்றி, நம் தினசரி வாழ்வில் கொஞ்சம் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டாலே போதும், கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள்:


எடையை குறைக்க முடியாமல் பரிதவிப்போரின் உடல், அதற்கு ஏற்ற வகையில் கொழுப்பை தக்க வைக்க வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் சிலர் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்பர். இது அவரவர் பரம்பரை சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்கலாம், வயது, அல்லது அவர்களின் வாழ்வியல் நடைமுறை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். நம் ஹார்மோன்களில் ஏற்படும் கோளறுகளும் இதற்கு ஒரு காரணம். 


உடல் எடையை இழக்க எந்த விதமான குறுக்கு வழிகளும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நாம் எந்த அளவிற்கு கொழுப்பினை தினசரி உட்கொள்கிறோமோ அதை விட அதிகமாக தினமும் கொழுப்பினை குறைக்க வேண்டும். இந்த உடல் எடை குறைப்பு முயற்சியில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அவற்றை எதிர் கொண்டு எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் முதலில் மனதில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | சருமம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்க!


வாழ்வியல் மாற்றங்கள்:


மனதளவில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தயார் படுத்துங்கள். அது, தினசரி நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளும் ஏதேனும் தாரக மந்திரமாக இருக்கலாம். முதல் நாள் உடற்பயிற்சி செய்கையில் கடினமாக இருக்கிறது என்பதற்காக அடுத்த நாள் அதை விட்டுவிடும் நபர்கள், உடல் எடையை குறைப்பதில்லை. அதனால், 10 நிமிடங்கள் என்றால் செய்யும் உடற்பயிற்சியை ஒழுங்காக செய்ய வேண்டும். சில நாட்களில் உங்களுக்குள் நீங்களே மாற்றங்களை உணர்வீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க பழகுவது போல உடற்பயிற்சி செய்யவும் பழகிக்கொள்ளுங்கள். 


உடற்பயிற்சி முறை:


நாம் டயட் இருந்தே கூட உடல் எடையை இழக்கலாம். ஆனால், சில நாட்கலில் டயட் இருப்பது கடினம். இதனால், கஷ்டப்பட்டு இழந்த சில கிலோ மீண்டும் விறுவிறுவென ஏறி விடும். இதை தவிர்க்க டயட்-உடற்பயிறி இரண்டுமே அவசியம். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுதான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே சிம்பிள் உடற்பயிற்சிகளை முதலில் கடைப்பிடிக்க பழகலாம். 1 நிமிடத்திற்கு ஒரு கடினமான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்றால் அதை செய்துதான் ஆக வேண்டும். கடினமாக இருந்தாலும் உடலில் உள்ள கொழுப்பு நன்றாகவே குறையும். 


டயட்:


உங்களது டயட் முறை சரியான அளவில் இல்லையென்றாலும் கண்டிப்பாக உடல் எடை இழப்பில் பிரச்சனை ஏற்படும். டயட் சார்ட்டை உருவாக்கும் போது அது நீண்ட நாட்களுக்கு உங்களுக்கு உதவுமா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். எதை சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்களாக சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உணவையும் சமைக்கும் முன்னர் அதை தயாரிக்க அதற்கேற்ற நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 


பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் அதை அளவுடன் சாப்பிட வேண்டாம், அவற்றை முற்றிலும் தவிர்க்க சிறிது காலங்கள் ஏற்படலாம். அது வரை பிடித்தவற்றை அளவுடன் சாப்பிடுவது நன்று. 


மனநலம் முக்கியம்:


சிலர், வாழ்வில் ஏதேனும் கடினமான கட்டத்தில் இருக்கின்றனர் என்றால் ஒன்று அவர்கள் அதிகமாக உடல் எடையை இழப்பர். அல்லது உடல் எடையை அதிகமாகிவிடுவர். அதனால், உடல் எடையை குறைக்க உங்களது மன நலமும் முக்கியம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். அதனால் மனதை முதலில் திடமாக வைத்துக்கொள்ளுங்கள். யோகா செய்வது, மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது போன்ற விஷயங்கள் கண்டிப்பாக உடல் எடை இழப்பிற்கு உங்கள் மனநிலையை தயார் படுத்த உதவும். 


மேலும் படிக்க | வயசானாலும் இளமையாக தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள்! எப்போதும் இளமை கொஞ்ச டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ