குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து பரவும் ஒரு தொற்று நோயாகும். ஒரு நபர் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதருடன் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அவருக்கு எளிதில் இந்த நோய் பரவுகிறது. குரங்கு, எலி, அணில் போன்ற விலங்குகளால் இந்நோய் பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபரின் படுக்கை, காயங்கள், உடல் திரவங்கள் மற்றும் வாயில் உள்ள நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவிலும் நுழைந்தது குரங்கு அம்மை: 


இந்தியாவிலும் கேரள மாநிலம் கொல்லம் நகரில் குரங்கு காய்ச்சலால் ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கேரளாவில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் துபாய் நாட்டிலிருந்து திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  


மேலும் படிக்க | Monkeypox in India: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி


முதல் நோயாளியின் மாதிரிகள் முன்னர் தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டது. அங்கு நோய் உறுதி செய்யப்பட்டது. தற்போது நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவிட் தொற்றுநோயின் தீய விளைவுகளால் உலகம் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இப்போது ஒரு வித்தியாசமான நோய் மக்களை பயமுறுத்துகிறது. இந்த நோயின் அறிகுறிகள் என்ன, அதை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.


குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள்:


- காய்ச்சல்
- தலைவலி
- தசை வலி
- முதுகு வலி
- உடலில் குளிர்ச்சி
- சோர்வு
- வீங்கிய நிணநீர் கணுக்கள்


குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகு, அவரது முகத்தில் தடிப்புகள் தோன்ற ஆரம்பித்து, படிப்படியாக அவை உடல் முழுவதும் பரவுகின்றன. முதலில் இந்த தடிப்புகள் லேசானவையாகவும், பின்னர் கருமையாகவும் மாறும். சொறி பெரிய பருக்கள் போல இருக்கும். இவை படிப்படியாக வளர்ந்து பின்னர் விழும். நோய் 2-4 வாரங்கள் நீடிக்கும்.


குரங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?


- இந்த நோயைத் தடுக்க, விலங்குகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது.


- பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து போதுமான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவிட் நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்காக சமூக இடைவெளி பேணப்பட்டது போலவே இதிலும் செய்யப்பட வேண்டும். 


- அடிக்கடி கைகளை கழுவவும். கழுவாத கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடாதீர்கள்.


இதற்கு சிகிச்சை உள்ளதா?


- இந்த நோய்க்கு இன்னும் பிரத்யேக மருந்து இல்லை. 


- அதன் சிகிச்சையில் பெரியம்மை தடுப்பூசி, வைரஸ் தடுப்பு மற்றும் விஐஜி பயன்படுத்தப்படுகிறது.


- அறிகுறிகளைப் பொறுத்து அதற்கேற்ற சிகிச்சையை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. 


- மருத்துவர்கள் இதற்கு பொதுவாக ஆண்டி வைரல் மருந்துகளை அளிப்பதுண்டு.


- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகளும் அளிக்கப்படும்.


- பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.


- அமெரிக்காவில் மங்கி பாக்ஸ் சிகிச்சையில் சின்னம்மைக்கு செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 28 நாட்களில் செலுத்தப்படுகிறது.


- சிகிச்சையின் முக்கிய அம்சமாக தனிமைப்படுத்தல் அறிவுறுத்தப்படுகின்றது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரங்கம்மை தடுப்பு நடவடிக்கை: தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ