இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

Monkeypox in India: இந்தியாவில்  முதல் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 05:51 PM IST
  • இந்தியாவில் உள்ள சர்வதேச பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்.
  • மத்திய சுகாதார அமைச்சகம் உயர்மட்ட பல்துறைக் குழுவை கேரளாவிற்கு உடனடியாக அனுப்பியது.
  • சொறி மற்றும் காய்ச்சல் போன்ற குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் வேண்டாம்.
இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை title=

இந்தியாவில்  முதல் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது. குரங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் முதல் குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிக்கு, மத்திய சுகாதார அமைச்சகம்  உயர்மட்ட பல்துறைக் குழுவை வியாழன் அன்று கேரளாவிற்கு உடனடியாக அனுப்பியது. அந்த குழு நிலைமையைச் சமாளிக்க போதுமான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அதிகாரிகளுக்கு உதவும் என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. வெளிநாட்டில் இருந்து தென் மாநிலம் திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

குரங்கு அம்மை: இந்தியாவில் உள்ள சர்வதேச பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்

அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச பயணிகள் நோய்வாய்ப்பட்டவர்களுடன், இறந்த அல்லது உயிருடன் இருக்கும் விலங்குகள், அதாவது எலிகள், அணில்கள் குரங்குகள் உள்ளிட்ட சிறிய பாலூட்டிகள் போன்ற விலங்குகளுடன் தொடர்பு மற்றும் பிறருடன் நெருங்கிய தொடர்பில் வருவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிரிக்காவில் இருந்து காட்டு விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துதல் (கிரீம்கள், லோஷன்கள், பொடிகள்), நோய்வாய்ப்பட்டவர்கள் பயன்படுத்தும் அசுத்தமான பொருட்களுடன் (உடை, படுக்கை அல்லது சுகாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பொருள் போன்றவை) அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | MonkeyPox Spread: பெரியம்மை ஒழிப்புக்கும் குரங்கு அம்மை நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன

சொறி மற்றும் காய்ச்சல் போன்ற குரங்கு அம்மை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் செய்யாமல், தாமதபடுத்தாமல் அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகவும். தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவையும் குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறியே.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மங்கி பாக்ஸ் என்ர குரங்கு அம்மை  விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும்  ஒரு வைரஸ். இது மருத்துவரீதியாக குறைவான தீவிரம் கொண்டதாக இருந்தாலும், பெரியம்மை நோயாளிகளிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட அறிகுறிகளை கொண்டுள்ளது. 1980 இல் பெரியம்மை ஒழிப்பு மற்றும் பெரியம்மை தடுப்பூசி நிறுத்தப்பட்டதன் மூலம், குரங்கு பாக்ஸ் பொது சுகாதாரத்திற்கான மிக முக்கியமான ஆர்த்தோபாக்ஸ் வைரஸாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்

மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News