குரங்கம்மை தடுப்பு நடவடிக்கை: தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை

Monkeypox in Tamil Nadu: குரங்கம்மை பரவாமல் தடுக்க தமிழக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2022, 05:57 PM IST
  • குரங்கம்மை பரவலைத் தடுக்க விமானநிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
  • சர்வதேச பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்.
  • தமிழக விமானநிலையங்களில் சோதனைகள் தீவிரம்
குரங்கம்மை தடுப்பு நடவடிக்கை: தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை title=

சென்னை: குரங்கம்மை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டிருந்த நிலையில், குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்கும் நடைமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றபோதிலும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று "குரங்கம்மை" பரவல் தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று சென்னை, விமான நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குரங்கு அம்மை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதன தீவிரபடுத்தபட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்

விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது. 

குரங்கம்மை தொற்று நோயாகும். குரங்கு அம்மை காய்ச்சல் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. எனவே, மழைக்காடு உள்ள பகுதிகளில் அதிக அளவில் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தல் எச்சரிக்கையாக இருக்கவும். 

மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச பயணிகள் நோய்வாய்ப்பட்டவர்களுடன், இறந்த அல்லது உயிருடன் இருக்கும் விலங்குகளுடன் தொடர்பு கொள்வதை தவ்ரிக்க வேண்டும் என்றும், பிற பயணிகளுடன் நெருங்கிய தொடர்பில் வருவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்த்துடன், ஆப்பிரிக்காவில் இருந்து காட்டு விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் விமான பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன.  

மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது. 

குரங்கம்மை தொற்று நோயாகும். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. எனவே, மழைக்காடு உள்ள பகுதிகளில் அதிக அளவில் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தல் எச்சரிக்கையாக இருக்கவும். 

Trending News