Tips To Control BP: இன்றைய மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், டென்ஷன் மிகுந்த வாழ்க்கை மற்றும் உடல் உழைப்பு என்பதே இல்லாத நிலை போன்றவற்றின் காரணமாக பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்தம் உட்பட பல தீவிர நோய்களுக்கு இரையாகி வருகின்றனர். நீண்ட காலத்திற்கு உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த அழுத்தம் அதிகமாக மட்டுமல்ல, குறைவாக இருந்தாலும் ஆபத்து தான். எனவே, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இரத்த அழுத்த சீராக பராமரிக்க, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வது பலன் தரும்.


உயர் ரத்தம் அழுத்தத்தை கட்டுப்படுத்த கடைபிடிக்க வேண்டிய காலை பழக்கங்கள் (Morning Habits to Control High BP)


காலையில் சீக்கிரம் விழித்தெழும் பழக்கம் 


இரவில் சீக்கிரம் தூங்கி, பகலில் அதிகாலாஇ எழுந்து கொள்ளும் பழக்கம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித தரக் கூடியது. அந்த வகையில், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முறையான தூக்கம் முக்கியம். தினமும் காலையில் எழுந்திருக்க சரியான நேரத்தை நிர்ணயித்துக் கொள்வது நல்லது, அதனால் உங்கள் உடல் கடிகாரம் சீராக இயங்கும். இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக எழுவதும் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு உட்பட பல நோய்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு, சீக்கிரம் விழித்தெழும் பழக்கத்தை கடைபிடிக்கவும்


வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம்


காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். அதில் ஒன்று இரத்த அழுத்தம். இது உடலை டீடாக்ஸ் செய்யும் வேலையையும் செய்கிறது. எனவே, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க, காலையை தண்ணீருடன் தொடங்கவும். அதிலும் தாமிர பாத்திரத்தில் இரவு முழுவதும் வைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதோடு, தண்ணீரை மிக வேகமாக குடிக்காமல், வ்சதியாக் அமர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க முயற்சிக்கவும்.


மேலும் படிக்க | கிட்னி - லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்


உடல் பயிற்சி அல்லது நடை பயிற்சி


இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக இருக்கவும் உங்களால் முடிந்த எளிய பயிற்சிகள் அல்லது நடை பயிற்சி அவசியம் தேவை. இதற்கு தினமும் காலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். இது உடலின் இரத்த ஓட்டம் சீராகி, எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாதோடு, உடலின் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பிற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.


ஆரோக்கியமான காலை உணவு


காலை உணவு என்பது ஒரு நாளின் முதல் உணவு. அன்றைய நாளுக்கான ஆற்றலை வழங்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும் ஆற்றலை கொடுக்கும் வகையில், காலை உணவில் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களையும் சேர்த்துக் கொள்வது நல்லது என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ