பிரபல PUBG ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிய மும்பை இளைஞர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெற்கு மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த ரமேஷ்( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), வயது 27. மென்பொருள் பொறியாளரான இவர் வீட்டில் இருந்து அலுவலகம் வெகு தொலைவில் இருப்பதால், வீட்டில் இருந்து பணிபுரிய முடிவு செய்துள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக PUBG விளையாட்டின் மோகத்தால், பணியை மறந்து தொடர்ந்து PUBG விளையாட்டினை விளையாடியுள்ளார்.


இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் பணியை இழக்க நேரிட்டுள்ளது. பின்னர் மன அழுத்தம் அதிகரிக்க, உளவியலாளர் உதவியை நாடியுள்ளார். எனினும் ரமேஷால் மன அழுத்தத்தில் இருந்து மீள இயலவில்லை. 


இதுகுறித்து உளவியலாளர் சாகர் முந்தாத தெரிவிக்கையில், தான் ரமேஷ் மட்டும் அல்லாமல் மேலும் பல மன அழுத்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், இதில் பெரும்பாளானோர் இயந்திரங்களின் பிடியில் சிக்கி தங்களை மறந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


சுமார் 7 சிட்டிங்க் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே ரமேஷ் ராவ்-னை காப்பாற்ற முடியாமல் போனதாகவும், அவரை காப்பாற்ற பெரும் அளவு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார். ராவ் தவிற மற்ற நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் குறிப்பிடத்தக்க ஒருவரின் நிலைமை பெரும் மாற்றம் கண்டுள்ளதாகவும், அவரது ஆன்லைன் விளையாட்டு ஆர்வத்தினை கட்டுப்படுத்த அவருக்கு 2G மொபைல் போன் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


சமீபத்தில் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.