கஷ்டபடாம வெயிட் குறைக்கணும்? அப்போ டெய்லி இந்த ஜூஸ் குடியுங்க
Summer Drinks: தற்போது பெரும்பாலான மக்கள் தவறான பழக்கவழக்கங்களால் உடல் பருமனுக்கு இரையாகி வருகின்றனர். எனவே நீங்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவேண்டுமானால், இந்த அற்புதயான பானங்களை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்கும் கோடைகால பானங்கள்: தற்போது பெரும்பாலான மக்கள் தவறான பழக்கவழக்கங்களால் உடல் பருமனுக்கு இரையாகி வருகின்றனர். அதிக எடை இருப்பது மோசமானதாகத் தோற்றதை தருவதோடு, பல நோய்களையும் ஏற்படுத்துகிறது. மறுபுறம், எடை அதிகரிப்பதன் காரணமாக, நீங்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்களுக்கு பலியாகிவிடுவீர்கள், அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க மக்கள் வெவ்வேறு உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். எனவே நீங்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவேண்டுமானால், இந்த அற்புதயான பானங்களை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க கோடையில் இந்த ஜூஸை குடியுங்கள்
ஆரஞ்சு தண்ணீர்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. அதனால்தான் இதை உட்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரைகிறது. அதே நேரத்தில், ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே நீங்கள் கோடையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரஞ்சு டிடாக்ஸ் பானத்தை தயாரித்து குடிக்கலாம். இதைச் செய்ய, ஒரு பாட்டிலில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் சில ஆரஞ்சு துண்டுகளை கலந்து சிறிது நேரம் கழித்து குடிக்கவும். இந்த பானத்தை குடிப்பதன் மூலம், உங்கள் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
மேலும் படிக்க | வாட்டி வதைக்கும் வறட்டு இருமலை விரட்டும் ‘சில’ பாட்டி வைத்தியங்கள்!
வெள்ளரி தண்ணீர்
பெரும்பாலான மக்கள் வெள்ளரிக்காய் சாப்பிட விரும்புகிறார்கள். அதே சமயம் கோடை சீசனில் வெள்ளரிக்காய் சந்தையில் அதிக அளவில் கிடைக்கும். இது உடலை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. மறுபுறம், வெள்ளரிக்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம். இதற்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து அதில் வெள்ளரித் துண்டுகளை கலந்து குடிக்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் உடல் நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் உங்கள் எடையும் குறையும்.
எலுமிச்சை தண்ணீர்
எலுமிச்சை பழத்தில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. எனவே இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. எனவே நீங்கள் கோடையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், எலுமிச்சை டிடாக்ஸ் பானத்தை குடிக்கலாம். இதற்கு ஒரு பாட்டிலில் தண்ணீரை நிறப்பி, அதில் சில எலுமிச்சை துண்டுகளை கலந்து சிறிது நேரம் கழித்து குடிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ