வாட்டி வதைக்கும் வறட்டு இருமலை விரட்டும் ‘சில’ பாட்டி வைத்தியங்கள்!

வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பல நேரங்களில் அவை பலனளிப்பதில்லை. அதோடு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2023, 12:26 AM IST
  • வறட்டு இருமல் காரணமாக, தொண்டையில் கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனையும் இருக்கும்
  • சித்தரத்தை ஆயுர்வேத இருமல் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது.
  • இஞ்சியில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது.
வாட்டி வதைக்கும் வறட்டு இருமலை விரட்டும் ‘சில’ பாட்டி வைத்தியங்கள்! title=

சளி, ஜலதோஷம் பிடிப்பதால் வரும் இருமலை விட, வறட்டு இருமல் என்பது நம்மை வாட்டி வதைக்க கூடியது. வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பல நேரங்களில் அவை பலனளிப்பதில்லை. அதோடு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது. வறட்டு இருமல் தொண்டையில் கடுமையான வலியையும் ஏற்படுத்துகிறது. வறட்டு இருமலை போக்க நமது பாட்டி வைத்தியம் மிகவும் கை கொடுக்கும். நமது பாட்டி வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வறட்டு இருமலை போக்க வேண்டுமானால், வறட்டு இருமல் தொடங்கிய உடனேயே சரியான மருத்துக்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் கவனக்குறைவால் வறட்டு இருமல் மோசமானால், இந்த உடனடி தீர்வுகள் உங்களுக்கு கைகொடுக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பால்

வறட்டு இருமல் நீங்க மஞ்சள் பலனளிக்கும். இதில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவுகிறது. வறட்டு இருமல் குணமாக மஞ்சள் பால் சிறந்த பலன் தரும். மேலும், மஞ்சளை சிறிது சூடாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.

தண்ணீர் மற்றும் உப்பு

வறட்டு இருமல் காரணமாக, தொண்டையில் கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனையும் இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது பாக்டீரியாவை நீக்கி இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

எலுமிச்சை - இஞ்சி

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை நோக்கி எதிர்த்து போராடி நமக்கு வறட்டு இருமல் வராமல் பாதுகாக்கிறது. மேலும் இஞ்சியில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. வறட்டு இருமல் சரியாக இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். இஞ்சியை தண்ணீரில் தட்டி போட்டு கொதிக்க வைத்து அதில், எலுமிச்சை கலந்து குடிப்பது சிறப்பான பலன்களைத் தரும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருமலை போக்க உதவுகிறது. இருமலுக்கு இஞ்சி கஷாயம் மிகவும் நன்மை பயக்கும். இது தொண்டை எரிச்சல் மற்றும் வலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

மேலும் படிக்க | தொப்பையை கரைக்கும் உத்தான பாதாசனம்... செய்வது எப்படி!

கருமிளகு

கருப்பு மிளகு இருமலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் உள்ள சத்துக்கள் வறட்டு இருமலை நீக்க உதவுகிறது. கருப்பு மிளகை தேன் அல்லது கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

சித்தரத்தை

சித்தரத்தை ஆயுர்வேத இருமல் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இருமல், சளி, சளி போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. சித்தரத்தை கஷாயத்தைக் குடித்தவுடன் வறட்டு இருமல் குணமாகும்.

தேன்

தேன் இருமலுக்கு நிவாரணம் தரும். எலுமிச்சம் பழத்துடன் தேன் கலந்து குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சூடான பால் கலக்காத தேநீரில் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.

மேலும் படிக்க | நீரிழிவை ஓட விரட்டும் ‘கேழ்வரகின்’ வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது).

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News