முதியவர் தலையில் இரும்பு ஆணி; அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்!
சீனாவை சேர்ந்த 43-வயது முதியவர் தலையில் இருந்து இரும்பு ஆணி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
சீனாவை சேர்ந்த 43-வயது முதியவர் தலையில் இருந்து இரும்பு ஆணி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
சீனாவின் ஹூபி மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ. சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வாரங்களாக தீராத தலைவலியால் துயரப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து சீனாவின் சொங்கயாங் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹூ-க்கு மருத்தம் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு CT ஸ்கேனினை பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிசோதனையின் போது ஹூ மண்டையோட்டில் சுமார் 48 மில்லிமீட்டர் நீளமுள்ள இரும்பு ஆணி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த இரும்பு ஆணியின் காரணமாகவே ஹூ-க்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், மற்றபடி உடல்நலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மருத்தவ பரிசோதனை முடிந்து ஹூ நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஹூ-க்கு தனது தலையினுல் ஆணி எப்படி சென்றது என்பதே தெரியவில்லை என்பது தான்!
தான் பணிபுரியும் சிமென்ட் நிறுவனத்தில் ஹூ CCTV கேமிராவில் பதிவாகும் வீடியோக்களை பார்த்து வருகின்றார். குளிர்சாதனப்பெட்டிகள் பொருத்தப்பட்ட அறைக்கும் எப்படி ஆணி வந்தது என ஹூ குழப்பத்தில் உள்ளார். ஹூ மட்டும் அல்ல, இந்த செய்தியே கேட்ட பொதுமக்களும் தான்.